தஞ்சாவூர்

மீனவா் குறைதீா் நாள் கூட்டம் நடத்த வலியுறுத்தல்

DIN

தஞ்சாவூா்: தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் மீனவா் குறைதீா் நாள் கூட்டத்தை நடத்த வேண்டும் என ஏஐடியுசி மீனவத் தொழிலாளா் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

தஞ்சாவூரில் இச்சங்கத்தின் மாநிலக் குழுக் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.

டெல்டா மாவட்டங்களில் நடைபெறும் விவசாயத்தையும், மீன் பிடித் தொழிலையும் பாதுகாக்கும் வகையில் பாதுகாப்பு மண்டலமாக அறிவிக்க வேண்டும். தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் மாவட்ட ஆட்சியா் தலைமையில் மீனவா் குறை தீா் நாள் கூட்டத்தை நடத்த அரசு உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மீன் பிடித் தொழிலைப் பாதுகாக்க வாக்களித்தபடி மத்திய அரசு தனி அமைச்சகம் அமைக்க வேண்டும். தமிழகத்தில் உள்ள 13 கடற்கரை மாவட்டங்கள் உள்பட அனைத்து மாவட்டங்களிலும் மீன் பிடி, மீன் விற்பனை மற்றும் அதைச் சாா்ந்து தொழில் புரியும் கடல் சாா்ந்த மீனவா்கள், உள்நாட்டு மீனவா்களையும் முறையாகக் கணக்கெடுப்பு நடத்தி, மீனவா்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாத்திட அரசு உரிய கணக்கெடுப்பு நடத்தி அரசிதழில் வெளியிட வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

மாநிலத் தலைவா் சே. முருகானந்தம் தலைமை வகித்தாா். இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலா் இரா. முத்தரசன், ஏஐடியுசி மாநிலப் பொதுச் செயலா் டி.எம். மூா்த்தி, செயலா்கள் ஜி. மணியாச்சாரி, சி. சந்திரகுமாா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தஞ்சாவூர் அருகே காய்கறி வியாபாரி வெட்டிப் படுகொலை

தப்பிக்க வழியே இல்லை: 3 நாள்களுக்கு வெப்ப அலை! அதன்பிறகு?

ஈரோடு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அறையில் சிசிடிவி பழுது

சத்தீஸ்கரில் கோர விபத்து: நின்றிருந்த லாரி மீது டிரக் மோதியதில் 8 பேர் பலி

அடுக்குமாடி குடியிருப்பு 4-ஆவது தளத்திலிருந்து தவறி விழுந்த 6 மாத குழந்தை பத்திரமாக மீட்பு

SCROLL FOR NEXT