தஞ்சாவூர்

காலமானார்: ஆடிட்டர் டி.எஸ். வெங்கடசுப்பன்

கும்பகோணம் சோலையப்பன் தெருவில் வசித்து வந்த ஆடிட்டர் டி.எஸ். வெங்கடசுப்பன் (81) மாரடைப்பால் வியாழக்கிழமை காலமானார்.

DIN

கும்பகோணம் சோலையப்பன் தெருவில் வசித்து வந்த ஆடிட்டர் டி.எஸ். வெங்கடசுப்பன் (81) மாரடைப்பால் வியாழக்கிழமை காலமானார்.
இவர் 40 ஆண்டுகளாக சரஸ்வதி பாடசாலா பெண்கள் மேல்நிலை பள்ளியின் தாளாளராக இருந்து வந்தார். மேலும், சிட்டி யூனியன் வங்கியில் 16 ஆண்டுகள் இயக்குநராக இருந்தார். தற்போது கோவிந்த தீட்சதர் புண்ணிய ஸ்மரண கமிட்டி தலைவராகவும் இருந்து வந்தார். 
தமிழ்நாடு பிராமணர் சங்கத்தின் தஞ்சாவூர் மாவட்டத் தலைவராகவும், காஞ்சிபுரம் சங்கர மடத்தின் கும்பகோணம் கிளையில் ஸ்ரீகார்யமாகவும் பணியாற்றி வந்தார். இதுபோல பல்வேறு சமூக, கல்வி, ஆன்மிக மேம்பாட்டுப் பணிகளில்  ஈடுபட்டு வந்தார்.
அவருடைய இறுதி சடங்குகள் வெள்ளிக்கிழமை (ஜன.4) காலை 9 மணியளவில் நடைபெறவுள்ளன. 
இவருக்கு மனைவி இந்திரா, 1 மகன், 3 மகள்கள் உள்ளனர். மருமகன் சுப்பிரமணியன் சென்னை உயர் நீதிமன்றத்தில் நீதிபதியாக உள்ளார். தொடர்புக்கு: 94455 60355.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பூலாங்குறிச்சியில் நாளை ‘நலம் காக்கும் ஸ்டாலின்’ முகாம்

பிரதமா், முதல்வா்களைப் பதவி நீக்கும் மசோதா: நாடாளுமன்றக் குழுவின் கால அவகாசம் நீட்டிப்பு

ஜாதி, மதங்களுக்கு அப்பாற்பட்டது அதிமுக: எடப்பாடி பழனிசாமி

தனியாா் நிறுவன ஊழியரைத் தாக்கி பணம் பறிப்பு: இருவா் கைது

புதிய ஊரக வேலைத் திட்டத்தால் தமிழகத்துக்கு கடும் நிதிச் சுமை: முதல்வா் மு.க.ஸ்டாலின் கண்டனம்

SCROLL FOR NEXT