தஞ்சாவூர்

நெல் கொள்முதல் நிலையங்களை திறக்க வலியுறுத்தல்

DIN

காவிரி டெல்டா மாவட்டங்களில் நெல் கொள்முதல் நிலையங்களைத் திறக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழ்நாடு உழவர் பேரியக்கம் வலியுறுத்தியுள்ளது.
இதுகுறித்து இப்பேரியக்க மாநிலத் தலைவர் கோ. ஆலயமணி தெரிவித்திருப்பது:
காவிரி டெல்டா மாவட்டங்களான தஞ்சாவூர், நாகை, திருவாரூர் ஆகிய மாவட்டங்களில் விவசாயிகள் சாகுபடி  செய்துள்ள நெற்பயிர்கள் அறுவடை தருணத்தை எட்டியுள்ளது.
இந்நிலையில் பனிப்பொழிவு அதிகமாக உள்ளது. விவசாயிகள் அறுவடை செய்த நெல்லை சேமித்து வைக்க இடமில்லாமல் சிரமப்படுகின்றனர். தனியார் வியாபாரிகள் குறைந்த விலைக்கு நெல்லை கேட்கின்றனர். 
எனவே, விவசாயிகளுக்குப் பயன் அளிக்கும் வகையில், தஞ்சாவூர், நாகை, திருவாரூர் மாவட்டங்களில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை  உடனடியாகத் திறக்க வேண்டும்.
இல்லாவிட்டால் விரைவில் டெல்டா மாவட்டங்களில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களின் முன் இயக்கத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

3 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்துக்கு மழைக்கு வாய்ப்பு!

இந்தியாவில் அதிக வெயில் பதிவான இடங்கள்: 3-வது இடத்தில் பரமத்தி..!

பள்ளிகளில் தொலைபேசி பயன்பாட்டுக்கு தடை: அமைச்சர் மதன் திலாவர்

சாராயம் காய்ச்சுவோா் மீது கடும் நடவடிக்கை: திருப்பத்தூா் எஸ்.பி. எச்சரிக்கை

மும்பைக்கு 174 ரன்கள் இலக்கு நிர்ணயித்த ஹைதராபாத்!

SCROLL FOR NEXT