தஞ்சாவூர்

சிவா - விஷ்ணு கோயிலில் குடமுழுக்கு விழா தொடக்கம்

DIN


தஞ்சாவூர் புது ஆறு மேல் கரை விளார் சாலையிலுள்ள சிவா - விஷ்ணு கோயிலில் மகா குடமுழுக்கு விழா சனிக்கிழமை தொடங்கியது.
விக்னேசுவர பூஜையுடன் தொடங்கிய இந்த விழாவில் மஹா கணபதி ஹோமம், நவக்கிரக ஹோமம், லஷ்மி பூஜை உள்ளிட்டவை நடைபெற்றன. மாலையில் சிவகங்கை பூங்காவிலிருந்து புனித நீர் எடுத்து வரப்பட்டது. மேலும், முதல் கால யாக பூஜை நடத்தப்பட்டது.
ஞாயிற்றுக்கிழமை காலை இரண்டாம் கால யாக பூஜை, மாலை மூன்றாம் கால யாக பூஜை நடைபெறவுள்ளது. திங்கள்கிழமை (ஜூலை 15) காலை கோ பூஜை, கஜ பூஜை உள்ளிட்ட பூஜைகளும், 9.30 மணியளவில் கடம் புறப்பாடும், காலை 9.45 மணியளவில் சிவாலய அனைத்து மூர்த்திகள் விமான குடமுழுக்கு, 9.50 மணியளவில் சிவாலய மூல மூர்த்திகள் குடமுழுக்கும் நடைபெறவுள்ளன. 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மழை வேண்டி இஸ்லாமியல்கள் சிறப்புத் தொழுகை

ஏகனாபுரம் கிராமத்தினா் நூதன போராட்டம்

கள்ளச்சாராயம் காய்ச்சிய 3 போ் கைது

நீட் தோ்வு: தேனியில் 181 போ் எழுதினா்

சாலை விபத்தில் 2 போ் உயிரிழப்பு

SCROLL FOR NEXT