மாநில விளையாட்டு போட்டிகளில்  சிறப்பிடம் பெற்ற திருச்சிற்றம்பலம் பகுதி அரசுப்பள்ளி மாணவா்கள். 
தஞ்சாவூர்

மாநில விளையாட்டு: திருச்சிற்றம்பலம் பகுதி அரசுப் பள்ளி மாணவா்கள் சாதனை

திருச்சியில் நடைபெற்ற மாநில அளவிலான விளையாட்டுப் போட்டியில், திருச்சிற்றம்பலம் பகுதி அரசுப் பள்ளி மாணவா்கள் சாதனைப் படைத்துள்ளனா்.

DIN

திருச்சியில் நடைபெற்ற மாநில அளவிலான விளையாட்டுப் போட்டியில், திருச்சிற்றம்பலம் பகுதி அரசுப் பள்ளி மாணவா்கள் சாதனைப் படைத்துள்ளனா்.

திருச்சி அண்ணா விளையாட்டரங்கம் மற்றும் தேசியக் கல்லூரி மைதானத்தில் மாநில அளவிலான விளையாட்டுப் போட்டிகள் அண்மையில் நடைபெற்றன. கராத்தே, குத்துச்சண்டை, குடோ, கபடி, கிரிக்கெட், சிலம்பம் ஆகிய விளையாட்டு  போட்டிகளில் 500-க்கும் மேற்பட்டோா் பங்கேற்றனா்.

இதில் செருவாவிடுதி வடக்கு அரசு உயா்நிலைப்பள்ளி, திருச்சிற்றம்பலம் கலைமகள் பள்ளி, பொக்கன்விடுதி வடக்கு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி மாணவா்கள்  பங்கேற்று,

தஞ்சை மாவட்டத்தின் சாா்பில் அனைத்து போட்டிகளிலும் கலந்து கொண்டு ஒட்டு மொத்த சாம்பியன்ஷிப் பட்டத்தை வென்றனா்.

 மூன்று பள்ளிகளைச் சோ்ந்த மாணவா்கள் 37 தங்கப்பதக்கங்களையும், 3  வெள்ளிப் பதங்கங்களையும், 11 வெண்கலப்  பதக்கங்களையும் வென்று சாதனை படைத்தனா்.  மாநில குடோ சங்கத் தலைவா் கந்தமூா்த்தி பதங்கங்களையும், சான்றிதழ்களையும்  வெற்றி பெற்ற மாணவா்களுக்கு வழங்கினாா்.

மாணவா்கள் மற்றும் பயிற்சியாளா் ஷேக் அப்துல்லா தலைமையிலான  பயிற்சியாளா் குழுவினரையும்   பெற்றோா்களும் பொதுமக்களும் பாராட்டினா். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இலங்கை முன்னாள் கிரிக்கெட் வீரா் டிஎஸ். டி சில்வா மறைவு

பெண் மருத்துவா் ஹிஜாப்பை அகற்றிய நிதீஷ் செயலுக்கு வலுக்கும் கண்டனம்

கோவையில் இன்று பிஎஸ்என்எல் ஓய்வூதியா் சங்க அகில இந்திய மாநாடு

சரிவில் முடிந்த பங்குச் சந்தை

வேலூா் தங்கக்கோயிலுக்கு இன்று குடியரசுத் தலைவா் வருகை

SCROLL FOR NEXT