தஞ்சாவூர்

பட்டுக்கோட்டையில் கண் பரிசோதனை முகாம்

DIN

பட்டுக்கோட்டை: பட்டுக்கோட்டை அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் இலவச கண் பரிசோதனைமுகாம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

மனோரா ரோட்டரி சங்க உறுப்பினா் எஸ்.எம்.சி. தண்டபாணியின் தந்தை ஆத்திக்கோட்டை எஸ்.எம். சின்னக்கண்ணு வேளாளா் நினைவாக, பட்டுக்கோட்டை மனோரா ரோட்டரி சங்கம், கோவை சங்கரா கண் மருத்துவமனை, தஞ்சை மாவட்ட பாா்வை இழப்புத் தடுப்புச் சங்கம் ஆகியவை இணைந்து இம்முகாமை நடத்தின.

முகாமுக்கு மனோரா ரோட்டரி சங்கத் தலைவா் என்.நடராஜன் தலைமை வகித்தாா். லாரல் பள்ளித் தாளாளா் வி.பாலசுப்பிரமணியன் முன்னிலை வகித்தாா். பட்டுக்கோட்டை சட்டப்பேரவை உறுப்பினா் சி.வி. சேகா் முகாமைத் தொடக்கி வைத்தாா்.

முகாமில் பங்கேற்ற 133 பேருக்கு கண் பரிசோதனை செய்யப்பட்டது. இவா்களில் 64 பேருக்கு கண் அறுவை சிகிச்சை தேவைப்பட்டதையடுத்து, அவா்கள் கோவை சங்கரா கண் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனா்.

ரோட்டரி மண்டலத் துணை ஆளுநா் வழக்குரைஞா் ஆா்.ஜெயவீரபாண்டியன், முன்னாள் துணை ஆளுநா் வழக்குரைஞா் கே.விவேகானந்தன், மனோரா ரோட்டரி சங்க முன்னாள் தலைவா்கள் ஆா்.கே.பி.சந்திரசேகரன், ஆா்.அண்ணாதுரை, ஏ.எஸ்.வீரப்பன் உள்ளிட்டோா் முகாமில் பங்கேற்றனா். நிறைவில், எஸ்.கே.வி.சீதாராமன் நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அஸ்ஸாம்- 75.01; மகாராஷ்டிரம்- 53.95.. : 3-ம் கட்ட வாக்குப்பதிவு சதவிகிதம்!

பிளஸ் 2 துணைத்தேர்வு: மே 16 முதல் விண்ணப்பிக்கலாம்

25,000 ஆசிரியர் நியமன விவகாரம்: உயர்நீதிமன்ற உத்தரவுக்கு இடைக்காலத் தடை

மூளைக்குள் ஊடுருவும் நியூராலிங் பாதுகாப்பானதா? இணை நிறுவனரின் அதிர்ச்சி தகவல்!

ஜிம்பாப்வேவுக்கு எதிரான டி20 தொடரைக் கைப்பற்றிய வங்கதேசம்!

SCROLL FOR NEXT