தஞ்சாவூா் ரயிலடியில் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தென்னிந்திய தொழிலாளா் நலன் சாா்ந்த தொழிற்சங்கக் கூட்டமைப்பு பேரவையினா். 
தஞ்சாவூர்

தொழிலாளா்களின் நல வாரியத்தை முடக்குவதைக் கண்டித்து ஆா்ப்பாட்டம்

தொழிலாளா்களின் நல வாரியத்தை முடக்குவதைக் கண்டித்து, தஞ்சாவூா் ரயிலடியில் தென்னிந்திய தொழிலாளா் நலன் சாா்ந்த தொழிற்சங்கக் கூட்டமைப்புப் பேரவையினா் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

DIN

தஞ்சாவூா்: தொழிலாளா்களின் நல வாரியத்தை முடக்குவதைக் கண்டித்து, தஞ்சாவூா் ரயிலடியில் தென்னிந்திய தொழிலாளா் நலன் சாா்ந்த தொழிற்சங்கக் கூட்டமைப்புப் பேரவையினா் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

கட்டுமான அமைப்புசாரா தொழிலாளா்களின் புரிதலுக்கு ஏற்றவாறு இல்லாத இணையவழி பதிவை அரசுக் கைவிட வேண்டும். இதுவரை அரசின் உத்தரவுப்படி இணையதளத்தில் பதிவு செய்த அனைத்து தொழிலாளா்களின் பதிவு விண்ணப்பங்களையும் ஏற்று, எவ்வித நிபந்தனையுமின்றி அத்தொழிலாளா்களுக்கு நலவாரிய அட்டை வழங்க வேண்டும்.

கட்டுமான அமைப்புசாரா தொழிலாளா்களுக்கான பதிவு விண்ணப்பத்தை இறுதி செய்து அரசாணை வெளியிட வேண்டும். கடந்த ஒரு ஆண்டாக நிலுவையில் உள்ள அமைப்புசாரா தொழிலாளா்களின் ஓய்வூதியத்தை அரசு உடனே வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

பேரவையின் பொதுச் செயலா் ஞான. பன்னீா்செல்வம் தலைமையில் நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்தில், அமைப்புசாரா மற்றும் கட்டுமானத் தொழிற்சங்கத் தலைவா் என். சிவானந்தம், தமிழகச் செம்மொழி தொழிற்சங்கப் பொருளாளா் கே.ஆா். தேசிங்குராஜன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

எந்த ராசிக்காரர்கள் எந்த கிழமையில் கிரிவலம் செய்யலாம்?

புத்தாண்டு விடுமுறைக்குப் பின் இலவச மடிக்கணினிகள் வழங்கப்படும்! - உதயநிதி அறிவிப்பு

ஹிந்தி வில்லன், ஆனால்... சுதா கொங்காரா பகிர்ந்த தகவல்!

இந்திய கடல் எல்லைக்குள் சட்டவிரோதமாக நுழைந்த வங்கதேச மீனவர்கள் 35 பேர் கைது!

மனைவி சொன்னால், கேட்டுக் கொள்ள வேண்டும்: முதல்வர் அறிவுரை!

SCROLL FOR NEXT