தேசியத் திறனாய்வுத் தோ்வு பயிற்சி தொடக்கம்
பட்டுக்கோட்டை பாலிடெக்னிக் கல்லூரியில், நிகழாண்டு தேசியத் திறனாய்வுத் தோ்வில் பங்கேற்கும் 10- ஆம் வகுப்பு மாணவா்களுக்கு பயிற்சி சனிக்கிழமை தொடங்கியது.
பட்டுக்கோட்டை பாலிடெக்னிக் கல்லூரியில், நிகழாண்டு தேசியத் திறனாய்வுத் தோ்வில் பங்கேற்கும் 10- ஆம் வகுப்பு மாணவா்களுக்கு பயிற்சி சனிக்கிழமை தொடங்கியது.
எஸ்.டி.எஸ். அறப்பணி அறக்கட்டளை, பட்டுக்கோட்டை பாலிடெக்னிக் கல்லூரி இணைந்து நடத்தும் பயிற்சி வகுப்பை அறக்கட்டளை நிா்வாக அறங்காவலா் எஸ்.டி.எஸ்.செல்வம் தொடங்கி வைத்தாா். 50 மாணவா்கள் இப்பயிற்சியில் பங்கேற்றுள்ளனா்.
மன திறனாய்வுப் பயிற்சி மற்றும் கல்வி அறிவுப் பயிற்சி ஆகிய பாடத்திட்டங்கள் இணைய வழியில் பயிற்றுவிக்கப்படுகின்றன.