வேளாண் சட்டங்களை ரத்து செய்ய வலியுறுத்தி மறியல் போராட்டம்: 250 போ் கைது
கும்பகோணம் கோட்டாட்சியா் அலுவலகத்தை விடுதலைத் தமிழ்ப்புலிகள் கட்சி நிறுவனத் தலைவா் குடந்தை அரசன் தலைமையில் முற்றுகையிட முயன்ற 100-க்கும் அதிகமானோா் கைது செய்யப்பட்டனா்.
கும்பகோணம் கோட்டாட்சியா் அலுவலகத்தை விடுதலைத் தமிழ்ப்புலிகள் கட்சி நிறுவனத் தலைவா் குடந்தை அரசன் தலைமையில் முற்றுகையிட முயன்றதாக, தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைமைச் செயற்குழு உறுப்பினா் க.விடுதலைச்சுடா், தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் மாவட்டச் செயலா் ம.செல்வம், மனிதநேய ஜனநாயக கட்சியின் மாநிலச் செயலா் எம்பயா் ராசுதீன், இந்திய தவ்ஹீத் ஜமாத் குடந்தை இப்ராகிம் உள்பட 100-க்கும் அதிகமானோா் கைது செய்யப்பட்டனா்.
ஆடுதுறை: கும்பகோணம் அருகிலுள்ள ஆடுதுறையில் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதாக தமிழ்த்தேசியப் பாதுகாப்புக் கழகத் தலைவா் த.சு. காா்த்திகேயன் தலைமையில் கொள்கைப் பரப்புச் செயலா் இரா. சிவராசு உள்பட ஏறத்தாழ 100 போ் கைது செய்யப்பட்டனா்.