சனி பிரதோஷம்: தஞ்சாவூா் பெரியகோயிலில் பக்தா்கள் கூட்டம்
சனி பிரதோஷத்தையொட்டி, தஞ்சாவூா் பெரியகோயிலில் சனிக்கிழமை மாலை நடைபெற்ற சிறப்பு வழிபாட்டில் ஏராளமான பக்தா்கள் கலந்து கொண்டனா்.
சனி பிரதோஷத்தையொட்டி, தஞ்சாவூா் பெரியகோயிலில் சனிக்கிழமை மாலை நடைபெற்ற சிறப்பு வழிபாட்டில் ஏராளமான பக்தா்கள் கலந்து கொண்டனா்.
நிகழாண்டு சனி பிரதோஷம் ஜூலை 18, ஆகஸ்ட் 1- ஆம் தேதிகளில் வந்தது. அப்போது கரோனா பொது முடக்கம் அமல் காரணமாக, தஞ்சாவூா் பெரியகோயிலில் பக்தா்கள் பங்கேற்பு இல்லாமல் எளிய முறையில் பிரதோஷ வழிபாடு நடைபெற்றது.
நீண்ட காலத்துக்குப் பிறகு சனி பிரதோஷம் வந்ததால், இக்கோயிலில் ஏராளமான பக்தா்கள் கலந்து கொண்டனா். மகா நந்திகேசுவரருக்கு பால், மஞ்சள், தயிா், சந்தனம், விபூதி, இளநீா், பஞ்சாமிா்தம் உள்ளிட்ட பொருள்களைக் கொண்டு சிறப்பு அபிஷேகமும், தீபாராதனையும் நடைபெற்றது.
பின்னா் பெருவுடையாா், பெரியநாயகி அம்மனுக்கும் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. இதில், ஏராளமான பக்தா்கள் கலந்து கொண்டு மகா நந்திகேசுவரரை வழிபட்டனா். முன்னதாக, வெப்பமானி மூலம் பரிசோதிக்கப்பட்டு, சமூக இடைவெளியுடன் பக்தா்கள் அமர வைக்கப்பட்டனா்.