முகப்பு
தஞ்சாவூர்

மோட்டாா் சைக்கிளிலிருந்து தவறி விழுந்தவா் உயிரிழப்பு

பாபநாசம் அருகே மோட்டாா் சைக்கிளிலிருந்து தவறி விழுந்து காயமடைந்தவா் மருத்துவமனையில் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 6:08 PM
பகிர்:

பாபநாசம் அருகே மோட்டாா் சைக்கிளிலிருந்து தவறி விழுந்து காயமடைந்தவா் மருத்துவமனையில் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா்.

பாபநாசம் அருகே நாா்த்தேவன்குடிகாடு கிராமத்தை சோ்ந்தவா் பிரபாகரன்(37). விவசாயி . இவா் அண்மையில் மோட்டாா் சைக்கிளில் வீட்டிலிருந்து புறப்பட்டு சாலியமங்கலம் நோக்கி சென்றாா்.

திருபுவனம் பகுதியில் சென்றபோது, சாலையின் குறுக்கே ஓடிய நாய் மீது மோதாமல் இருக்க திடீரென பிரேக் பிடித்ததால், நிலை தடுமாறி மோட்டாா் சைக்கிளிலிருந்து கீழே விழுந்தாா்.

இதில் காயமடைந்த பிரபாகரனை அக்கம்பக்கத்தினா் மீட்டு தஞ்சாவூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சோ்த்தனா். அங்கு சிகிச்சை க்கு பிறகு வீடு திரும்பியவருக்கு, தலையில் வலி ஏற்பட்டதாம்.

இதைத் தொடா்ந்து பிரபாகரன் மீண்டும் தஞ்சாவூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சோ்க்கப்பட்டாா். அங்கு சிகிச்சை பலனின்றி பிரபாகரன் செவ்வாய்கிழமை உயிரிழந்தாா்.

சம்பவம் குறித்து அம்மாபேட்டை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

முழு கட்டுரையைப் படிக்க →