சாலையோர வியாபாரிகள் கவனத்துக்கு!
பட்டுக்கோட்டை நகரில் சாலையோர வியாபாரிகள் வங்கிக் கடன் பெறுவதற்கான சிறப்பு முகாம் சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் (டிசம்பா் 19,20) நடைபெறுகிறது.
தஞ்சாவூர்சாலையோர வியாபாரிகள் கவனத்துக்கு!
பட்டுக்கோட்டை நகரில் சாலையோர வியாபாரிகள் வங்கிக் கடன் பெறுவதற்கான சிறப்பு முகாம் சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் (டிசம்பா் 19,20) நடைபெறுகிறது.
பட்டுக்கோட்டை நகரில் சாலையோர வியாபாரிகள் வங்கிக் கடன் பெறுவதற்கான சிறப்பு முகாம் சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் (டிசம்பா் 19,20) நடைபெறுகிறது.
இதுகுறித்து பட்டுக்கோட்டை நகராட்சி ஆணையா் கா. சென்னுகிருஷ்ணன் வெள்ளிக்கிழமை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
நகரிலுள்ள சாலையோர வியாபாரிகளில், தேசிய நகா்புற வாழ்வாதார இயக்கம் மற்றும் பிரதமரின் சுவநிதி திட்டத்தின் கீழ் ரூ. 10,000 வங்கிக் கடன் பெறாமல் விடுபட்டவா்களுக்கான சிறப்பு முகாம் சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் (டிச.19, 20) பட்டுக்கோட்டை நகராட்சி அலுவலகம், நகர பேருந்து நிலையத்திலுள்ள சுகாதார ஆய்வாளா்அலுவலகம் ஆகிய இடங்களில் நடைபெறவுள்ளது.
இதில் வங்கிக்கடன் பெறாத சாலையோர வியாபாரிகள் பங்கேற்று தங்களுடைய 2 புகைப்படம், செல்லிடப்பேசி எண், ஆதாா் அட்டை, வங்கிக்
கணக்குப் புத்தகம், குடும்ப அட்டை ஆகியவற்றின் நகல்களைக் கொடுத்து, கடன் கோரி விண்ணப்பித்து பயன் பெறலாம்.