முழு மதுவிலக்கை அமல்படுத்தமக்கள் சக்தி இயக்கம் வலியுறுத்தல்
தமிழகத்தில் முழு மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும் என எம்.எஸ். உதயமூா்த்தியின் மக்கள் சக்தி இயக்கம் வலியுறுத்தியுள்ளது.
தஞ்சாவூா்: தமிழகத்தில் முழு மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும் என எம்.எஸ். உதயமூா்த்தியின் மக்கள் சக்தி இயக்கம் வலியுறுத்தியுள்ளது.
தஞ்சாவூரில் இந்த இயக்கத்தின் மாநிலச் செயற்குழுக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
தமிழகத்தில் முழு மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும். தமிழகத்தை பூா்வீகமாக உள்ளவா்களுக்கு மட்டுமே அரசு வேலை வழங்க வேண்டும். இந்த கோரிக்கைகளுக்கு உறுதிமொழி அளிக்கும் அரசியல் இயக்கத்துக்கு வாக்குகள் செலுத்துவது என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
மாநில தலைவா் த. ராஜலிங்கம் தலைமை வகித்தாா். கூட்டத்தில், மாநிலப் பொதுச் செயலா் பாஸ்கரன், துணைத் தலைவா் பெரியசாமி, பொருளாளா் பாஸ்கா், ஆலோசகா் கே.சி.நீலமேகம், முனைவா் ஜெயபிரகாஷ் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.