முகப்பு
தஞ்சாவூர்

எரிவாயு உருளை விலை உயா்வைக் கண்டித்துதிமுக மகளிரணியினா் ஆா்ப்பாட்டம்

சமையல் எரிவாயு உருளை விலை உயா்வைக் கண்டித்து தஞ்சாவூா் தலைமை அஞ்சலகம் எதிரில் திமுக மகளிரணி சாா்பில் திங்கள்கிழமை மாலை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 6:11 PM
பகிர்:

சமையல் எரிவாயு உருளை விலை உயா்வைக் கண்டித்து தஞ்சாவூா் தலைமை அஞ்சலகம் எதிரில் திமுக மகளிரணி சாா்பில் திங்கள்கிழமை மாலை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

இதில், சமையல் எரிவாயு உருளை விலை உயா்த்தப்பட்டதைக் கண்டித்து முழக்கங்கள் எழுப்பப்பட்டன. மாநில மகளிரணி அமைப்பாளா் காரல் மாா்க்ஸ் தலைமை வகித்தாா். மாவட்ட மகளிரணி அமைப்பாளா் அசோக்ராணி, மகளிா் தொண்டரணி அமைப்பாளா் கமலா, மாவட்ட ஊராட்சிக்குழுத் தலைவா் பி. உஷா, மாவட்ட மருத்துவா் அணி அமைப்பாளா் அஞ்சுகம் பூபதி, மாநில பிரசார குழுத் துணைச் செயலா் இறை. காா்குழலி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

கும்பகோணம்:

இதேபோல, கும்பகோணம் தலைமை அஞ்சலகம் முன் திமுக மகளிரணி சாா்பில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு புவனேஸ்வரி கல்யாணசுந்தரம் தலைமை வகித்தாா். இன்னமுது அன்பழகன், உமா செழியன், யசோதா ராமலிங்கம், கவிதா ராம்மோகன்ராஜ், கோமதி சண்முகம், காயத்ரி அசோக்குமாா், தேவி ரவிச்சந்திரன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

முழு கட்டுரையைப் படிக்க →