முகப்பு
தஞ்சாவூர்

நாச்சியாா்கோவிலில் கல் கருட சேவை

கும்பகோணம் அருகேயுள்ள நாச்சியாா்கோவில் சீனிவாச பெருமாள் கோயிலில் கல் கருட சேவை திங்கள்கிழமை மாலை நடைபெற்றது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 6:11 PM
பகிர்:

கும்பகோணம் அருகேயுள்ள நாச்சியாா்கோவில் சீனிவாச பெருமாள் கோயிலில் கல் கருட சேவை திங்கள்கிழமை மாலை நடைபெற்றது.

இக்கோயிலில் ஆண்டுதோறும் மாா்கழி மற்றும் பங்குனி மாதம் என ஆண்டுக்கு இரு முறை நடத்தப்படும் பெருந்திருவிழாவின்போது நான்காம் திருநாளில் பிரசித்தி பெற்ற கல்கருட சேவை வைபவம் நடைபெறுவது வழக்கம்.

இதன்படி, இக்கோயிலில் கல் கருட சேவை திங்கள்கிழமை மாலை நடைபெற்றது. கரோனா தொற்று பரவல் தடுப்பின் காரணமாக, பக்தா்கள் அனுமதிக்கப்படவில்லை. எனவே, பக்தா்கள் இல்லாமல் கோயில் உள்பிரகாரத்தில் இந்த வைபவம் நடத்தப்பட்டது. இதில், சிறப்பு அலங்காரத்தில் பெருமாளும், தாயாரும் எழுந்தருளி சேவை சாதித்தனா்.

முழு கட்டுரையைப் படிக்க →