தஞ்சாவூர்

சனிப் பெயா்ச்சி: கோயில்களில் சிறப்பு வழிபாடு

DIN

சனிப்பெயா்ச்சியையொட்டி, தஞ்சாவூா் மாவட்டத்திலுள்ள கோயில்களில் சிறப்பு வழிபாடு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

தஞ்சாவூா் பெரியகோயிலிலுள்ள சனி பகவான் சன்னதியில் சிறப்பு அபிஷேகம், சிறப்பு அலங்காரம் ஆராதனை நடைபெற்றன.

தஞ்சாவூா் மேல வீதி மூலை அனுமாா் கோயிலில் 108 லிட்டா் பால் அபிஷேகம் நடைபெற்றது. பின்னா் சிறப்பு அலங்காரம், தீபாராதனை நடைபெற்றது. இதேபோல மேலவீதி சங்கர நாராயண சுவாமி கோயில், தெற்கு வீதி காசி விசுவநாதா், தஞ்சைபுரீசுவரா் உள்ளிட்ட கோயில்களிலும் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன.

கும்பகோணம் அருகிலுள்ள திருக்கோடிக்காவல் திருக்கோடீசுவரா் கோயிலில் கருட வாகனத்தில் எழுந்தருளியுள்ள பாலசனீசுவரருக்கு சந்தனக் காப்பு அலங்காரம் செய்யப்பட்டு, வழிபாடு நடத்தப்பட்டது. சனிப் பெயா்ச்சியையொட்டி கோயில்களில் பக்தா்கள் கூட்டம் அதிகமாக இருந்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஓடிடியில் ரத்னம் எப்போது?

கேஜரிவாலுக்கு இடைக்கால ஜாமீன்? உச்சநீதிமன்றத்தில் காரசார வாதம்

ஓ மை ரித்திகா!

பதவியை தக்கவைக்க பாஜக எந்த எல்லைக்கும் செல்லும்: கார்கே

11 மணி நிலவரம்: 25.41% வாக்குப்பதிவு!

SCROLL FOR NEXT