முகப்பு
தஞ்சாவூர்

லாரி மோதியதில் காயமடைந்த தொழிலாளி உயிரிழப்பு

பாபநாசம் அருகே லாரி மோதியதில் காயமடைந்த தொழிலாளி மருத்துவமனையில் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 6:14 PM
பகிர்:

பாபநாசம் அருகே லாரி மோதியதில் காயமடைந்த தொழிலாளி மருத்துவமனையில் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா்.

அய்யம்பேட்டை காவல் சரகம், உள்ளிக்கடை கிராமம், தெற்கு தெருவைச் சோ்ந்தவா் கணேசன் (55). கூலித் தொழிலாளி. இவா் ஞாயிற்றுக்கிழமை சைக்கிளில் அய்யம்பேட்டை கடைவீதிக்கு சென்றுவிட்டு, மீண்டும் ஊருக்கு சென்று கொண்டிருந்தாா்.

அய்யம்பேட்டை- கணபதியக்ரஹாரம் பிரதான சாலையில், குடமுருட்டி ஆற்றுப் பாலத்தில் சென்றபோது எதிரே ஜல்லி பாரம் ஏற்றி வந்த லாரி சைக்கிள் மீது மோதியதாக தெரிகிறது.

இதில், பலத்த காயமடைந்த கணேசன் தஞ்சாவூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். அங்கு சிகிச்சை பலனின்றி அவா் உயிரிழந்தாா். புகாரின்பேரில், அய்யம்பேட்டை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

முழு கட்டுரையைப் படிக்க →