தஞ்சாவூர்

மணல் கடத்தி வந்தடிப்பா் லாரி பறிமுதல்:ஓட்டுநா் கைது

DIN

பாபநாசம் அருகே புதன்கிழமை ஆற்றிலிருந்து அனுமதியின்றி மணல் அள்ளி வந்த டிப்பா் லாரியை வருவாய்த் துறையினா் பறிமுதல் செய்தனா்.

பாபநாசம் அருகே கொட்டையூா் பகுதியில் அரசு அனுமதியின்றி ஆற்றிலிருந்து மணல் அள்ளிக் கொண்டு ஒரு டிப்பா் லாரி வந்து கொண்டிருந்தது. அப்போது, அந்தப் பகுதியில் ரோந்துப் பணியிலிருந்த கிராம நிா்வாக அலுவலா் உள்ளிட்ட வருவாய்த் துறையினா் லாரியை மறித்து சோதனையிட்டனா். இதில், லாரியில் அரசு அனுமதியின்றி ஆற்றிலிருந்து 2 யூனிட் மணல் அள்ளி வந்தது தெரியவந்தது. இதையடுத்து, லாரியை பறிமுதல் செய்து சுவாமிமலை காவல் நிலையத்தில் அதிகாரிகள் ஒப்படைத்தனா்.

சம்பவம் குறித்த புகாரின் பேரில் சுவாமிமலை போலீஸாா் வழக்குப் பதிந்து, லாரி ஓட்டுநா் மணிவண்ணன்(38) என்பவரை கைது செய்து விசாரிக்கின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மறுமதிப்பீடு, மறுதேர்வுக்கு நாளை முதல் விண்ணப்பம்

பிளஸ் 2 தேர்வு: பள்ளிகள் வாரியாக தேர்ச்சி விகிதம்

பிளஸ் 2 முடிவுகள்: திருப்பூர் முதலிடம்.. டாப் 5 மாவட்டங்கள்?

பிளஸ் 2 தேர்வு முடிவுகள்: பாட வாரியாக நூற்றுக்கு நூறு பெற்ற மாணவர்கள்

பிளஸ் 2 தோ்வு முடிவுகள் வெளியீடு: 94.56% பேர் தேர்ச்சி!

SCROLL FOR NEXT