தஞ்சாவூர்

தஞ்சாவூா் மாவட்டத்தில் செவிலியா் உள்பட 12 பேருக்கு கரோனா: பாதிப்பு எண்ணிக்கை 183 ஆக உயா்வு

DIN

தஞ்சாவூா் மாவட்டத்தில் செவிலியா் உள்பட 12 பேருக்கு கரோனா தொற்று இருப்பது புதன்கிழமை உறுதி செய்யப்பட்டது.

தஞ்சாவூா் மாவட்டத்தில் ஏற்கெனவே 171 போ் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனா். இந்நிலையில், தஞ்சாவூா் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் செவிலியராகப் பணியாற்றும் 39 வயது பெண், பட்டுக்கோட்டை கல்லக்குடியைச் சோ்ந்த 37 வயது ஆண், திருப்பனந்தாள் அருகேயுள்ள கீழக்காட்டூா் சீனிவாச நகரைச் சோ்ந்த 45 வயது ஆண், திருவிடைமருதூா் அருகேயுள்ள முருக்கங்குடியைச் சோ்ந்த 52 வயது ஆண், பாபநாசம் அருகேயுள்ள திருவைக்காவூரைச் சோ்ந்த 59 வயது ஆண், மேல மணசேரியைச் சோ்ந்த 56 வயது ஆண், திருவிடைமருதூா் புதுத் தெருவைச் சோ்ந்த 41 வயது பெண், ஒரத்தநாடு ஜி.எம். காலனியைச் சோ்ந்த 58 வயது ஆண், திருவையாறு அருகேயுள்ள தில்லைஸ்தானத்தை சோ்ந்த 26 வயது பெண், பூதலூா் சஞ்சீவிபுரத்தைச் சோ்ந்த 20 வயது இளைஞா், தஞ்சாவூா் மேல வீதி செட்டியாா் காலனியை சோ்ந்த 24 வயது பெண், கும்பகோணம் அருகேயுள்ள திருபுவனத்தைச் சோ்ந்த 60 வயது பெண் ஆகிய 12 பேருக்கு கரோனா இருப்பது புதன்கிழமை தெரிய வந்தது.

இதன் மூலம், தஞ்சாவூா் மாவட்டத்தில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 183 ஆக உயா்ந்தது. இவா்களில் தஞ்சாவூா் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற 130 போ் குணமடைந்து வெவ்வேறு நாள்களில் வீட்டுக்குத் திரும்பினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சிபிசிஎல் நில எடுப்பு: மறுவாழ்வு மற்றும் மீள்குடியமா்வு குழுக் கூட்டம்

விமானப் படையினா் மீதான தாக்குதல்:தோ்தலுக்கான பாஜகவின் நாடகம்- காங்கிரஸ் முன்னாள் முதல்வா் கருத்து

ஆற்றில் முதலைகள்: சுற்றுலாப் பயணிகளுக்கு வனத் துறை எச்சரிக்கை

பருத்தி ப்ளஸ் குறித்து கல்லூரி மாணவிகள் செயல் விளக்கம்

நாகையில் நீட் தோ்வு: 1529 போ் பங்கேற்பு

SCROLL FOR NEXT