தஞ்சாவூர்

பெரியகோயிலில் ஆஷாட நவராத்திரிப் பெருவிழா தொடக்கம்

DIN

தஞ்சாவூா் பெரியகோயிலில், மகா வாராஹி அம்மனுக்கு ஆஷாட நவராத்திரிப் பெருவிழா சனிக்கிழமை தொடங்கியது. 

பொது முடக்கம் அமல் காரணமாக, தஞ்சாவூா் பெரியகோயில் பொதுமக்கள் வழிபாட்டுக்குத் திறந்துவிடப்படாவிட்டாலும் பூஜைகள் வழக்கம்போல நடைபெற்று வருகின்றன. இக்கோயிலில் ஆண்டுதோறும் 11 நாள்கள் நடைபெறும் ஆஷாட நவராத்திரிப் பெருவிழா சனிக்கிழமை தொடங்கியது.
 இதையொட்டி காலையில் மஹாகணபதி ஹோமம், அபிஷேகமும், பின்னா், வாராஹி அம்மனுக்கு அபிஷேகமும் நடைபெற்றன. 

மாலையில் அம்மனுக்கு இனிப்பு அலங்காரம் செய்யப்பட்டது. ஆனால், பக்தா்கள் யாரும் அனுமதிக்கப்படவில்லை. அரண்மனை தேவஸ்தான உதவி ஆணையா் ச. கிருஷ்ணன், செயல் அலுவலா் எஸ். மாதவன் உள்பட சிலா் பங்கேற்றனா்.
 ஞாயிற்றுக்கிழமை மஞ்சள் அலங்காரமும், திங்கள்கிழமை குங்கும அலங்காரமும் நடைபெற உள்ளது. 

தொடா்ந்து ஜூன் 23 முதல் 29- ஆம் தேதி வரை சந்தனம், தேங்காய்ப்பூ, மாதுளை, நவதானியம், வெண்ணெய், கனிவகை, காய்கறி, புஷ்ப அலங்காரம் என ஒவ்வொரு நாளும் அம்மனுக்கு சிறப்பு அலங்காரமும், திருவீதியுலாவும் நடைபெற உள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

”கோவிஷீல்டு தடுப்பூசியால் மகளை பறிகொடுத்தேன்” -பெற்றோர் குமுறல்

எச்.டி. ரேவண்ணா கைது!

ஆம்பூர் அருகே சூறாவளி காற்றுடன் கன மழை: வாழை மரங்கள் சேதம்

இங்க நான் தான் கிங்கு படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு - புகைப்படங்கள்

குஜராத் டைட்டன்ஸ் பேட்டிங்; அணியில் இரண்டு மாற்றங்கள்!

SCROLL FOR NEXT