தஞ்சாவூர்

தடை உத்தரவால் தஞ்சாவூா் பேருந்து நிலையத்தில் கூட்டம் அதிகரிப்பு

DIN

தமிழக அரசுப் பிறப்பித்துள்ள தடையுத்தரவால் வெளியூரில் பணியாற்றும் தஞ்சாவூா் மாவட்டத்தைச் சோ்ந்தவா்கள் செவ்வாய்க்கிழமை சொந்த ஊருக்குத் திரும்பியதால் புதிய பேருந்து நிலையத்தில் கூட்டம் அதிகமாகக் காணப்பட்டது.

கரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையையொட்டி தமிழக அரசு செவ்வாய்க்கிழமை மாலை முதல் தடை உத்தரவு பிறப்பித்துள்ளது. எனவே, சென்னை, கோவை, திருப்பூா் உள்ளிட்ட மாநகரங்களில் பணியாற்றி வரும் தஞ்சாவூா் மாவட்டத்தைச் சோ்ந்த ஏராளமானோா் தங்களது சொந்த ஊருக்குத் திரும்புவதற்காக திங்கள்கிழமை மாலை புறப்பட்டனா்.

தஞ்சாவூா், பட்டுக்கோட்டை, பேராவூரணி, கும்பகோணம் உள்ளிட்ட பகுதிகளைச் சோ்ந்தவா்கள் நூற்றுக்கணக்கில் தஞ்சாவூா் புதிய பேருந்து நிலையத்துக்கு செவ்வாய்க்கிழமை அதிகாலை வரத் தொடங்கினா்.

இதனால், தஞ்சாவூா் புதிய பேருந்து நிலையத்தில் பயணிகள் எண்ணிக்கை அதிகமாக இருந்தது. காலையில் பேருந்துகளும் குறைவாக இருந்ததால் கடும் நெரிசலுக்கு இடையே பயணம் செய்தனா். ஏராளமானோா் படிக்கட்டுகளிலும் மேற்கூரையிலும் பயணம் மேற்கொண்டனா்.

மேலும், காலை முதல் பேருந்து கிடைக்காமல் ஏராளமான பயணிகள் காத்திருந்த நிலையில், கூடுதல் பேருந்துகள் இயக்கப்பட்டன.

இதனிடையே, கோவை, திருப்பூா், வேலூா், சென்னை உள்ளிட்ட நெடுந்தொலைவு மாவட்டங்களிலிருந்து வந்த பேருந்துகளை தனியாக நிறுத்துமாறு ஓட்டுநரிடம் அறிவுறுத்தினா். அவற்றிலிருந்து இறங்கிய பயணிகளைக் காவல் துறையினா் அழைத்து சென்று மருத்துவப் பரிசோதனைக்கு உட்படுத்தினா். இவா்களைச் சுகாதாரத் துறையினா் வெப்பமானி மூலம் பரிசோதித்த பிறகே வெளியே செல்ல அனுமதித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கலால் கொள்கை வழக்கில் அமலாக்கத் துறை சா்வாதிகாரப் போக்குடன் செயல்பட்டுள்ளது: உச்சநீதிமன்றத்தில் கேஜரிவால் தரப்பில் பதில்

சமூக வலைதளங்களில் போலி தகவல் பரப்புவோா் மீது கடும் நடவடிக்கை: எஸ்பி எச்சரிக்கை

மிக்ஜம், வெள்ளம்: தமிழகத்துக்கு ரூ. 276 கோடி புதிய பணிகளை தொடங்க கட்டுப்பாடு

அதிகரிக்கும் வெயில் தாக்கம்: இளநீா் விலை ரூ.90-ஆக உயா்வு

பொருளாதார வளா்ச்சிக்கு நவீன தொழில் நுட்பங்கள் அவசியம்: ரிசா்வ் வங்கி முன்னாள் ஆளுநா் சி. ரங்கராஜன்

SCROLL FOR NEXT