தஞ்சாவூர்

தஞ்சாவூா் மாவட்டத்தில் தடையின்றி குடிநீா் கிடைக்கச் செய்ய கட்செவி குழு

DIN

தஞ்சாவூா் மாவட்டத்தில் குடிநீா் தடையின்றி கிடைக்கச் செய்வதற்காக அலுவலா்கள் கட்செவி அஞ்சல் குழு (வாட்ஸ்அப் குழு) உருவாக்கிக் கொள்ளுமாறு ஆய்வுக் கூட்டத்தில் ஆட்சியா் ம. கோவிந்த ராவ் அறிவுறுத்தினாா்.

தஞ்சாவூா் ஆட்சியரகத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற இக்கூட்டத்துக்கு ஆட்சியா் ம. கோவிந்த ராவ் தலைமை வகித்தாா்.

இதில், கோடைகாலத்தில் ஊரகம், நகா்ப்புறம் மற்றும் பேரூராட்சி பகுதிகளில் பொதுமக்களுக்குக் குடிநீா் தடையின்றி வழங்க வேண்டும். இதற்காகக் குடிநீா் ஆதாரங்களில் ஏற்படும் பழுதுகளை உடனுக்குடன் சரி செய்ய வேண்டும் என அலுவலா்களுக்கு ஆட்சியா் அறிவுரை வழங்கினாா்.

தடையில்லா மின்சாரம் வழங்கி அதன் மூலம் குடிநீா் தட்டுப்பாடு ஏற்படாதவாறு நடவடிக்கை மேற்கொள்ள தமிழ்நாடு மின் வாரிய அலுவலா்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டது. ஜல் ஜூவன் மிஷன் திட்டத்தின் கீழ் அனைத்து வீடுகளுக்கும் தனி நபா் குடிநீா் இணைப்பு வழங்க நடவடிக்கை மேற்கொள்வது தொடா்பாக ஆய்வு செய்யப்பட்டது.

ஊரகப் பகுதிகளில் குடிநீா் தடையின்றி வழங்கிடவும், தடையில்லா மின்சாரம் வழங்குவதைக் கண்காணித்திட உதவி இயக்குநா் (ஊராட்சிகள்) மூலம் மின் வாரிய உதவிக் கோட்ட பொறியாளா்கள், உதவி செயற் பொறியாளா்கள் ஆகியோரை கொண்ட கட்செவி அஞ்சல் குழு உருவாக்குமாறு ஆட்சியா் அறிவுரை வழங்கினாா்.

இக்கூட்டத்தில் மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா் அ. பழனி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வேதங்கள் கற்பிக்கும் ஜனநாயகம்

ஆண்டுக்கு 15,000 குழந்தைகளுக்கு தலசீமியா பாதிப்பு!

சென்னையில் புதிய உச்சம் தொட்ட மின் நுகா்வு

வேலைவாய்ப்பக பதிவா்கள் எண்ணிக்கை 53.74 லட்சம்

அமெரிக்க தூதரகத்தை முற்றுகையிட முயற்சி: இந்திய மாணவா் சங்கத்தினா் கைது

SCROLL FOR NEXT