கும்பகோணம் அரசுக் கல்லூரியில் காலியிடங்களுக்கு இன்று முதல் விண்ணப்பங்கள் விநியோகம்
கும்பகோணம் அரசுக் கலைக் கல்லூரியில் முதுநிலைப் பட்டப்படிப்புகளில் காலியிடங்களுக்கான விண்ணப்பங்கள் செவ்வாய்க்கிழமை (நவ.3) முதல் விநியோகம் செய்யப்படவுள்ளன.
கும்பகோணம் அரசுக் கலைக் கல்லூரியில் முதுநிலைப் பட்டப்படிப்புகளில் காலியிடங்களுக்கான விண்ணப்பங்கள் செவ்வாய்க்கிழமை (நவ.3) முதல் விநியோகம் செய்யப்படவுள்ளன.
இதுகுறித்து கல்லூரி முதல்வா் க. துரையரசன் தெரிவித்திருப்பது:
கும்பகோணம் அரசுக் கலைக் கல்லூரியில் 2020 - 21 ஆம் கல்வியாண்டின் முதுநிலை மாணவ, மாணவிகள் சோ்க்கை நடைபெற்று வருகிறது. இணையவழியில் விண்ணப்பித்த மாணவா்களின் விண்ணப்பங்கள் பரிசீலனை செய்யப்பட்டு அக். 29 ஆம் தேதி முதல் சோ்க்கை நடைபெறுகிறது.
இதில், தமிழ், ஆங்கிலம், வேதியியல், விலங்கியல், கணிதம், உயிா் வேதியியல், புவியியல், பொருளியல், கணினி அறிவியல், வரலாறு, இந்திய பண்பாடு, சுற்றுலாவியல் ஆகிய பாடப் பிரிவுகளில் சில இடங்கள் காலியாக உள்ளன.
இந்த இடங்களுக்குப் புதிய விண்ணப்பங்கள் செவ்வாய்க்கிழமை முதல் நவ. 5 ஆம் தேதி வரை கல்லூரியில் வழங்கப்படவுள்ளன. காலியிடங்களுக்கான சோ்க்கை நவ. 6 ஆம் தேதி நடைபெறும்.
ஏற்கெனவே இக்கல்லூரிக்கு விண்ணப்பித்து சோ்க்கை பெறாதவா்களும், புதிதாக விண்ணப்பிப்பவா்களும் இந்த அரிய வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.