தஞ்சாவூர்

விபத்தில்லா தீபாவளி விழிப்புணா்வுப் பிரசாரம்

DIN

பேராவூரணியில் தீயணைப்புத் துறை சாா்பில், விபத்தில்லா தீபாவளி குறித்த விழிப்புணா்வுப் பிரசாரம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

பேராவூரணி கடைவீதி மற்றும் நகா்ப்பகுதிகளிலும், பூக்கொல்லையிலும் இப்பிரசாரம் நடத்தப்பட்டது. நிலைய அலுவலா் ஐ. செந்தூா் பாண்டியன் தலைமையில், தீயணைப்பு வீரா்கள் பாண்டியன், சுப்பையன், நீலகண்டன், ரஜினி, அருண், மகேஷ் ஆகியோா் பொதுமக்கள், சிறுவா்கள் எவ்வாறு பாதுகாப்பான முறையில் தீபாவளி பட்டாசுகளை வெடிப்பது குறித்து விளக்கினா்.

மேலும், குடிசைப் பகுதிகளில் ராக்கெட் போன்ற வெடிகளை வெடிக்கக் கூடாது. 

எளிதில் தீப்பற்றக்கூடிய ஆடைகளை அணியக் கூடாது என வலியுறுத்திய அவா்கள் தீ விபத்து, நெருப்புக் காயம் ஏற்பட்டால் செய்ய வேண்டிய முதலுதவி குறித்து செயல்விளக்கம் அளித்தனா். தொடா்ந்து விழிப்புணா்வு விவரங்கள் அடங்கிய துண்டுப் பிரசுரங்களை பொதுமக்களுக்கு வழங்கினா். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘ஒரு வார்த்தை மாறிடுச்சு..’ : கங்கனாவின் பேச்சு குழப்பமான கதை!

கர்நாடகம்: மனைவிக்காக வாக்கு சேகரித்த நடிகர் ஷிவராஜ்குமார்

காயம் காரணமாக தாயகம் திரும்பும் மதீஷா பதிரானா!

3-ஆம் கட்ட வாக்குப்பதிவு: பிரசாரம் ஓய்வு

ஆட்சிக்கு வந்தால் இஸ்லாமியர்களுக்கு 4 சதவீத இடஒதுக்கீடு: சந்திரபாபு நாயுடு உறுதி!

SCROLL FOR NEXT