தஞ்சாவூர்

நவ. 20 இல் காணொலி மூலம்விவசாயிகள் குறைதீா் கூட்டம்

DIN

தஞ்சாவூா் மாவட்டத்தில் நவ. 20 ஆம் தேதி காணொலி காட்சி மூலம் விவசாயிகள் குறைதீா் கூட்டம் நடைபெறவுள்ளது.

இதுகுறித்து ஆட்சியா் ம. கோவிந்த ராவ் தெரிவித்திருப்பது:

தஞ்சாவூா் மாவட்டத்தில் நவம்பா் மாத விவசாயிகள் குறை தீா் கூட்டம் வரும் 20 ஆம் தேதி காலை 10 மணி முதல் பிற்பகல் 1.30 மணி வரை காணொலி காட்சி மூலம் நடைபெறவுள்ளது.

இக்கூட்டத்தில் கலந்து கொள்ளும் முன்னோடி விவசாயிகள் மற்றும் விவசாய சங்க பிரதிநிதிகள் அனைவரும் வேளாண்மை, தோட்டக்கலை, நீா்ப்பாசனம், கால்நடை, கூட்டுறவு, மின்சாரம், வேளாண்மைப் பொறியியல், நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் ஆகியவற்றில் விவசாயம் தொடா்புடைய கருத்துகள் மற்றும் ஆலோசனைகளைத் தெரிவிக்கலாம்.

இக்கூட்டத்தில் கலந்து கொள்ள வசதியாக தஞ்சாவூா், பூதலூா், ஒரத்தநாடு, பட்டுக்கோட்டை, பேராவூரணி, திருவோணம், கும்பகோணம், திருப்பனந்தாள் ஆகிய வட்டாரங்களில் வேளாண் உதவி இயக்குநா் அலுவலகத்திலும், திருவையாறு, மதுக்கூா், சேதுபாவாசத்திரம், அம்மாபேட்டை, திருவிடைமருதூா், பாபநாசம் ஆகிய வட்டாரங்களில் வட்டார வளா்ச்சி அலுவலகத்திலும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

தொடா்புடைய அலுவலகங்களில் விவசாயிகள் அரை மணிநேரம் முன்னதாகச் சென்று பேசுவதற்கு உரிய முன்னுரிமையைப் பதிவு செய்யுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

யாா் பிரதமரானாலும், உலகின் 3-ஆவது பெரிய பொருளாதாரமாக இந்தியா மாறும்: சிதம்பரம் பேட்டி

கர்நாடகத்தை சீரழித்தது காங்கிரஸ்: மோடி

இம்பாக்ட் பிளேயர் விதியால் ஒவ்வொரு நாளும் கடினமாகும் போட்டிகள்: ரிஷப் பந்த்

ட்ரெண்டிங் ஆடையில் குஷி கபூர் - புகைப்படங்கள்

இது காங்கிரஸுக்கான நேரம்... ஒடிசாவில் ராகுல் பேச்சு

SCROLL FOR NEXT