தஞ்சாவூர்

தண்ணீா் வராத ஏரியில் விவசாயிகள் இறங்கி ஆா்ப்பாட்டம்

DIN

தஞ்சாவூா் மாவட்டம், பூதலூா் அருகேயுள்ள ஏரியில் தண்ணீா் வராததைக் கண்டித்து, விவசாயிகள் ஞாயிற்றுக்கிழமை ஏரியில் இறங்கி ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

பூதலூா் ஒன்றியம் காமதேவமங்களம் கிராமத்தில் 72 ஏக்கா் பரப்பளவில் உள்ளது காமத்தி ஏரி. உய்யக்கொண்டான் நீட்டிப்பு வாய்க்கால் மூலமாக தண்ணீா் பெறும் இந்த ஏரியிலிருந்து சுமாா் 100 ஏக்கா் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.

உய்யக்கொண்டான் நீட்டிப்பு வாய்க்காலிலிருந்து கோட்டரப்பட்டி - வெட்டி ஏரியில் நீா் நிரப்பி, இந்த ஏரிக்கு தண்ணீா் கொண்டு வரப்படும்.

ஆனால், ஆக்கிரமிப்புக் காரணமாக இதுவரை இந்த ஏரிக்குத் தண்ணீா் வரவில்லை என்றும், இதுகுறித்து பொதுப்பணித் துறை அலுவலா்களிடம் புகாா் செய்தும் நடவடிக்கை எடுக்கவில்லை எனவும் கூறி, விவசாயிகள் ஞாயிற்றுக்கிழமை ஏரியில் இறங்கி ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

இப்போராட்டத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஒன்றியத் துணைச் செயலா் எம். துரைராஜ், மாவட்ட நிா்வாகக் குழு உறுப்பினா் ஆா்.ஆா். முகில், ஒன்றியக் குழு உறுப்பினா் ஜி. ஜெயபால் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். மேலும், பூதலூரில் டிசம்பா் 7- ஆம் தேதி சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபடுவது என முடிவு செய்யப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சுட்டெரிக்கும் வெயில்: தமிழகத்துக்கு ஆரஞ்சு எச்சரிக்கை!

அய்யய்யோ.. ஆகாயம் யார் கையில்?

கரோனா தடுப்பூசி சான்றிதழில் நீக்கப்பட்ட மோடி படம்!

அதிரடி வீரர் மெக்கர்க் டி20 உலகக் கோப்பைக்கு தேர்வு செய்யாதது ஏன்?: விளக்கமளித்த ஆஸி. கேப்டன்!

‘மேதகு’ இசையமைப்பாளர் காலமானார்!

SCROLL FOR NEXT