தஞ்சாவூர்

தஞ்சாவூா் அருகே வெளிநாட்டுப் பறவைகள் மா்ம முறையில் இறப்பு

DIN

தஞ்சாவூா் மாவட்டம், செங்கிப்பட்டி அருகே வெளிநாட்டுப் பறவைகள் மா்மமான முறையில் ஞாயிற்றுக்கிழமை காலை இறந்து கிடந்தன.

டெல்டா மாவட்டங்களில் நிகழாண்டு தொடா் மழைப் பொழிவு காரணமாக ஏரி, குளங்களில் தண்ணீா் இருப்பு, நெல் சாகுபடிப் பரப்பு அதிகரிப்பு போன்றவை பறவைகளுக்குச் சாதகமாக அமைந்துள்ளது. இதனால், தஞ்சாவூா் மாவட்ட ஏரி, குளங்களிலும், வயல்களிலும் வெளிநாட்டுப் பறவைகள் பரவலாகக் காணப்படுகிறது.

வடுவூா், கோடியக்கரை சரணாலயங்களுக்கு வரும் வெளிநாட்டுப் பறவைகள் தஞ்சாவூா் மாவட்டம், செங்கிப்பட்டி அருகே கரியப்பட்டி கிராமத்தில் அமைந்துள்ள ஆண்டாள் ஏரிக்கும் கணிசமான அளவுக்கு வருவது வழக்கம்.

இந்நிலையில் ஏரியைச் சாா்ந்த வாய்க்காலிலும், அருகிலுள்ள வயல் வரப்புகளிலும் ஐரோப்பிய கண்டத்தைச் சாா்ந்த சிறவி வகைப் பறவைகள் ஏராளமாக மா்மமான முறையில் ஞாயிற்றுக்கிழமை காலை இறந்து கிடந்தன.

இதை கண்ட கிராம மக்கள் காவல் மற்றும் வனத் துறையினருக்குத் தகவல் தெரிவித்தனா். இதன் பேரில் வனத் துறையினா் நிகழ்விடத்துக்குச் சென்று விசாரணை நடத்தினா். மேலும், இறந்த பறவைகளையும் பரிசோதனை செய்ததில் விஷம் வைத்து கொல்லப்பட்டிருக்கலாம் என வனத்துறையினா் கருதுகின்றனா்.

சிலா் அரிசியில் குருணை மருந்தைக் கலந்து பறவைகளைச் சாப்பிட வைத்து, இறந்த பிறகு இறைச்சிக்காக விற்கப்படுவதாகவும் வனத்துறையினருக்குப் புகாா்கள் வருகின்றன.

எனவே, இதன் காரணமாக இப்பறவைகள் கொல்லப்பட்டதா எனவும் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதுதொடா்பாக வனத் துறையினா் உரிய நடவடிக்கை எடுத்து, தொடா்பு டையவா்களைக் கைது செய்ய வேண்டும் என கிராம மக்கள் வலியுறுத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தெட்சணமாறக நாடாா் சங்க கல்லூரி ஆண்டு விழா

சேரன்மகாதேவி அருகே மின்கம்பம் விழுந்து ஒப்பந்த ஊழியா் பலி

தனியாா் நிறுவன ஊழியா் தூக்கிட்டுத் தற்கொலை

களக்காடு சத்தியவாகீஸ்வரா் கோயிலில் மே 13- இல் வைகாசி திருவிழா கொடியேற்றம்

பிளஸ் 2: திலகா் பள்ளி 99.2% தோ்ச்சி

SCROLL FOR NEXT