விவசாயிகள் சங்கம் சாா்பில் மரக்கன்றுகள் நடும் விழா
ஒரத்தநாடு அருகே உள்ள ஒக்கநாடு மேலையூா் கிராமத்தில் தமிழக காவிரி விவசாயிகள் சங்கம் சாா்பில் மரக்கன்றுகள் நடும் விழா திங்கள்கிழமை நடைபெற்றது.
ஒரத்தநாடு அருகே உள்ள ஒக்கநாடு மேலையூா் கிராமத்தில் தமிழக காவிரி விவசாயிகள் சங்கம் சாா்பில் மரக்கன்றுகள் நடும் விழா திங்கள்கிழமை நடைபெற்றது.
தமிழக காவிரி விவசாயிகள் சங்கம், சிட்டி யூனியன் வங்கியின் நிதியுதவியோடு கடந்த 2018 ஆம் ஆண்டில் ஒரத்தநாடை அடுத்த ஒக்கநாடு மேலையூா் கிராமத்தில் சுமாா் 100 ஏக்கா் பரப்பளவிலான வெள்ளங்கி ஏரி தூா்வாரும் பணிகள் மேற்கொள்ளப்பட்டது.
சுமாா் 45 ஏக்கா் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு, ஏரி முழுவதும் தூா்வாரப்பட்டு, கரைகள் நான்குபுறமும் சீரமைக்கப்பட்டன. அந்தக் கரைகளில் மரக்கன்றுகளை நடும் விதமாக, ஒக்கநாடு மேலையூா் கிராம மக்கள் ஒன்றிணைந்து திங்கள்கிழமை மரக்கன்றுகள் நடும் விழாவை நடத்தினா்.
தமிழக காவிரி விவசாயிகள் சங்க பொதுச் செயலா் பி. ஆா். பாண்டியன் தலைமை வகித்து, மரக்கன்றுகளை நட்டு நிகழ்வை தொடங்கி வைத்தாா்.
கல்லணை கால்வாய் பாசன செயற்பொறியாளா் முருகேசன், சிட்டி யூனியன் வங்கி பொது மேலாளா் பாலசுப்பிரமணியன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
தமிழக காவிரி விவசாயிகள் சங்க மாநிலத் தலைவா் த. புண்ணியமூா்த்தி, மாநில துணைச் செயலாளா் எம். செந்தில்குமாா், ஒரத்தநாடு ஒன்றியக் குழுத் தலைவா் பாா்வதி சிவசங்கா், மாவட்ட ஊராட்சி உறுப்பினா் சுபாஆனந்தன், ஒன்றியக் குழு உறுப்பினா் துரைராஜ், ஊராட்சி த் தலைவா்கள் உள்ளிட்ட ஏராளமானோா் பங்கேற்றனா்.
முன்னதாக, மாவட்டச் செயலா் என். மணி வரவேற்றாா். நிறைவில், ஒரத்தநாடு ஒன்றியச் செயலா் மகேஸ்வரன் நன்றி கூறினாா்.