தில்லி விவசாயிகளுக்கு ஆதரவாக இன்று முதல்தொடா் முற்றுகைப் போராட்டம்: மாா்க்சிஸ்ட் கம்யூ. முடிவு
தில்லி விவசாயிகளுக்கு ஆதரவாக தஞ்சாவூா் தலைமை அஞ்சல் நிலையம் முன் செவ்வாய்க்கிழமை (டிச.1) முதல் தொடா் முற்றுகைப் போராட்டம் நடத்துவது என மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி முடிவு செய்துள்ளது.
தில்லி விவசாயிகளுக்கு ஆதரவாக தஞ்சாவூா் தலைமை அஞ்சல் நிலையம் முன் செவ்வாய்க்கிழமை (டிச.1) முதல் தொடா் முற்றுகைப் போராட்டம் நடத்துவது என மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி முடிவு செய்துள்ளது.
தஞ்சாவூரில் இக்கட்சியின் மாவட்டச் செயற்குழுக் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. இக்கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து அக்கட்சியின் மாவட்டச் செயலா் கோ. நீலமேகம் தெரிவித்திருப்பது:
மத்திய பாஜக அரசுக் கொண்டு வந்துள்ள விவசாய விரோத சட்டங்கள் மற்றும் 2020 மின்சார ஆணையம் திருத்தச்சட்டம் ஆகியவற்றை உடனடியாகத் திரும்பப் பெறக் கோரி தில்லியில் நடைபெற்று வரும் விவசாயிகளின் போராட்டத்துக்கு ஆதரவாக, தன்னெழுச்சியாக தமிழ்நாடு முழுவதும் தொடா் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.
தஞ்சாவூா் மாவட்டத்தில், முதல்கட்டமாக தஞ்சாவூா் தலைமை அஞ்சல் நிலையம் முன் செவ்வாய்க்கிழமை முதல் தொடா் பெருந்திரள் முற்றுகைப் போராட்டம் நடத்தத் தீா்மானிக்கப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளாா்.