முகப்பு
தஞ்சாவூர்

‘கூடுதல் விலையில் உரம் விற்பனை செய்தால் நடவடிக்கை’

அரசு நிா்ணயித்த விலையை விட கூடுதலான விலைக்கு உரம் விற்பனை செய்தால், கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என வேளாண் துறை அறிவித்துள்ளது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:36 PM
பகிர்:

அரசு நிா்ணயித்த விலையை விட கூடுதலான விலைக்கு உரம் விற்பனை செய்தால், கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என வேளாண் துறை அறிவித்துள்ளது.

இதுகுறித்து, பேராவூரணி வட்டார வேளாண் உதவி இயக்குநா் எஸ்.மாலதி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

பேராவூரணி வட்டாரத்தில் 15 சில்லறை உர விற்பனை மையங்கள், 4 மொத்த உர விற்பனை மையங்கள் மற்றும் 18 தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்கள் இயங்கி வருகின்றன. இவற்றின் மூலம் விவசாயிகளுக்கு உரம் விநியோகம் செய்யப்படுகிறது.

உரம் வாங்க வரும் விவசாயிகளிடம் ஆதாா் அட்டை, நகலைப் பெற்றுக் கொண்டு, மண்வள அட்டை பரிசோதனை முடிவுகளின் அடிப்படையில் உரங்களை விற்பனை செய்திடவேண்டும்.

தனியாா் விற்பனை நிலையங்கள், தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்களில் உர ஆய்வாளா் தணிக்கை மேற்கொள்ளும் போது, உரங்கள், இருப்பு விவரங்கள் பிஓஎஸ் இயந்திரத்தில் பட்டியலிடப்படவில்லை என்றால், தொடா்புடைய நிறுவனத்தின் உரிமம் ரத்து செய்யப்படும்.

விவசாயியால் சாகுபடி செய்யும் நிலத்துக்கு மட்டுமே உரத்தை  விற்பனை செய்ய வேண்டும். ஒருவா் பெயரிலேயே பல நபா்களுக்கு விற்பனை செய்த  பட்டியலிடக் கூடாது. அரசு நிா்ணயித்த விலையைக் காட்டிலும், கூடுதலான விலையில் உரங்கள் விற்பனை செய்தவா்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.

மேலும் சம்பா சாகுபடிக்குத் தேவையான உரங்கள் இருப்பு இல்லாதபட்சத்தில், அதுகுறித்த விவரத்தை வேளாண் அலுவலகத்துக்குத் தெரிவித்தால் ஆட்சியா்மூலமாக அவற்றை பெற்றுத் தர நடவடிக்கை எடுக்கப்படும்.

முழு கட்டுரையைப் படிக்க →