த.மறவக்காடு அமரிக்குளம் ஏரிக்கரைகளில் 5,000 பனை விதைகள் நடவு
பட்டுக்கோட்டை அருகே த.மறவக்காடு அமரிக்குளம் ஏரிக்கரைகளில் 5,000 பனை விதைகள் மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பில் ஞாயிற்றுக்கிழமை நடப்பட்டன.
தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை அருகே த.மறவக்காடு அமரிக்குளம் ஏரிக்கரைகளில் 5,000 பனை விதைகள் மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பில் ஞாயிற்றுக்கிழமை நடப்பட்டன.
சர்வதேச பெண் குழந்தைகள் தினத்தை முன்னிட்டு தம்பிக்கோட்டை மறவக்காடு கிராமத்தில் இந்த நிகழ்வு நடைபெற்றது.
அந்த ஊரிலுள்ள சுமார் 170 ஏக்கர் பரப்புள்ள அமரிக்குளம் ஏரியின் 4 கரைகளிலும் பனை விதைகள் நடும் பணியை ஒரு சிறுமியும், மக்கள் நீதி மய்ய கட்சியின் தஞ்சை தெற்கு மாவட்டப் பொறுப்பாளர் மருத்துவர் பா. சதாசிவமும் பனை விதையை ஊன்றித் தொடங்கி வைத்தனர்.
இதைத் தொடர்ந்து ஏரியைச் சுற்றிலும் குழிகள் தோண்டப்பட்டு 5,000 பனை விதைகள் நடப்பட்டன. முன்னதாக, இப்பணியில் ஈடுபட்ட விவசாயத் தொழிலாளர்களுக்கு மண்வெட்டி உள்ளிட்ட உபகரணங்கள் கட்சி சார்பில் வழங்கப்பட்டன.
பட்டுக்கோட்டை ஊராட்சி ஒன்றிய முன்னாள் தலைவர் ஆர்.கே.என்.வேதரெத்தினம் உள்ளிட்டோர் நிகழ்வில் பங்கேற்றனர்.