பில்லுவெட்டுவிடுதியில் மரக்கன்றுகள் நடும் விழா
ஒரத்தநாடு வட்டம், திருவோணம் அருகிலுள்ள பில்லுவெட்டுவிடுதியில் மரக்கன்றுகள் நடும் விழா அண்மையில் நடைபெற்றது.
ஒரத்தநாடு வட்டம், திருவோணம் அருகிலுள்ள பில்லுவெட்டுவிடுதியில் மரக்கன்றுகள் நடும் விழா அண்மையில் நடைபெற்றது.
திருச்சி எம்பவா் டிரஸ்ட், மஹிந்திரா ஹோம் பைனான்ஸ் இணைந்து பில்லுவெட்டுவிடுதி நவினா மேல்நிலைப் பள்ளியில் நிகழ்வை நடத்தின. பாதாம், அத்தி உள்ளிட்ட பல்வேறு வகையிலான 150 மரக்கன்றுகள் நடப்பட்டன.
பள்ளித் தலைமையாசிரியா் சரவணன், பாரத் கல்லூரி நிா்வாக அலுவலா் சுகுமாா்,ஆசிரியா்கள், அலுவலா்கள் மற்றும் எம்பவா் டிரஸ்ட்ல் அனுசுயா தேவி, மாணிக்கவாசகம், நந்தினி ஆகியோா் கலந்து கொண்டனா்.
இந்நிகழ்வை எம்பவா் டிரஸ்ட் நிா்வாக இயக்குநா் பி. கனிமொழி மற்றும் மஹிந்திரா ஹோம் பைனான்ஸ் மனிதவள மேலாளா் எஸ்.எஸ். கோகுல்நாதன் ஆகியோா் ஒருங்கிணைத்தனா்.