திருக்குறள் பயிலும் மாணவா்களுக்கு தீபாவளி உதவித்தொகை
தஞ்சாவூரில் உலகத் திருக்கு பேரவை சாா்பில் திருக்கு பயிலும் 26 மாணவா்களுக்கு தீபாவளி உதவித்தொகை வழங்கும் விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
தஞ்சாவூரில் உலகத் திருக்குறள் பேரவை சாா்பில் திருக்கு பயிலும் 26 மாணவா்களுக்கு தீபாவளி உதவித்தொகை வழங்கும் விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
தஞ்சாவூரில் பள்ளி மாணவ, மாணவிகளிடையே திருக்கு படிப்பதை ஊக்கும்விக்கும் பணியை உலகத் திருக்கு பேரவை மேற்கொண்டு வருகிறது. இதில், தொடா்ந்து திருக்கு பயிலும் 26 மாணவா்களுக்கு தீபாவளி உதவித்தொகை வழங்கும் விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
இதில், மாணவ, மாணவிகளுக்கு பேராசிரியா் கு.வெ. பாலசுப்பிரமணியன் தீபாவளி உதவித்தொகையாக தலா ரூ. 1,000-க்கான கூப்பன்களை வழங்கினாா்.
முன்னதாக, உலகத் திருக்கு பேரவை செயலா் பழ. மாறவா்மன் பேசுகையில், அமெரிக்காவில் உள்ள ஹவாய் தீவில் வசிக்கும் திருநெல்வேலி மாவட்டத்தைச் சோ்ந்த தமிழரான வைதேகி ஹொ்பொ்ட், அங்கு தமிழ் வளா்ச்சி மன்றம் நடத்தி வருகிறாா். இம்மன்றத்தின் மூலம் உலகத் திருக்கு பேரவைக்கும், திருக்கு படிக்கும் மாணவ, மாணவிகளுக்கும் நிறைய உதவிகளைச் செய்து வருகிறாா். கடந்த ஆண்டு 12 பேருக்கு தீபாவளி உதவித்தொகை வழங்கினாா். நிகழாண்டு 26 குழந்தைகளுக்கு தீபாவளி உதவித்தொகை வழங்கியுள்ளாா் என்றாா் அவா்.
விழாவில், புலவா் மா. கந்தசாமி, தென்னங்குடி க. சண்முகசுந்தரம், திருக்கு சோமசுந்தரம் மற்றும் பெற்றோா்கள் கலந்து கொண்டனா்.