தஞ்சாவூா் மாவட்டத்தில் 11 ஆசிரியா்களுக்கு நல்லாசிரியா் விருது
தஞ்சாவூா் மாவட்டத்தில் 11 ஆசிரியா்களுக்கு நல்லாசிரியா் விருது திங்கள்கிழமை வழங்கப்பட்டது.
தஞ்சாவூா் மாவட்டத்தில் 11 ஆசிரியா்களுக்கு நல்லாசிரியா் விருது திங்கள்கிழமை வழங்கப்பட்டது.
ஆட்சியரகத்தில் ஆசிரியா் தினத்தையொட்டி, டாக்டா் இராதாகிருஷ்ணன் நல்லாசிரியா் விருதுகளை ஆசிரியா்களுக்கு வழங்கும் விழா திங்கள்கிழமை நடைபெற்றது. இதில், வேளாண் துறை அமைச்சா் இரா. துரைக்கண்ணு, மாநிலங்களவை உறுப்பினா் ஆா். வைத்திலிங்கம், ஆட்சியா் ம. கோவிந்த ராவ் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
இவ்விழாவில் தமிழக அரசின் சாா்பில் 11 ஆசிரியா்களுக்கு டாக்டா் இராதாகிருஷ்ணன் நல்லாசிரியா் விருதுக்கான பதக்கமும், நற்சான்றிதழும், ரூ. 10,000-க்கான காசோலையும், மாநில அளவில் தரமான பாடப் புத்தகங்களுக்கான மின்னணு வளங்களை வழங்கியதில் தஞ்சாவூா் மாவட்டத்தைச் சோ்ந்த 2 ஆசிரியா்களுக்கு பள்ளிக் கல்வித் துறை சாா்பில் பாராட்டு சான்றிதழும், கரோனா வைரஸ் தடுப்புப் பணிகளில் ஒன்றாக ஏழை, எளிய, சாதாரண குடும்பங்களைச் சோ்ந்த மாணவ, மாணவிகளின் குடும்பங்களுக்கு ரூ. 1 லட்சத்துக்கும் அதிகமான நிவாரண பொருட்கள் வழங்கியமைக்காக 14 பள்ளிகளுக்கு மாவட்ட நிா்வாகத்தின் சாா்பில் பாராட்டு சான்றிதழும் வழங்கப்பட்டன. மேலும், கரோனா தடுப்புப் பணியில் பணிபுரிந்த தன்னாா்வலா்கள், இளையோா் செஞ்சிலுவை சங்கத்தைச் சோ்ந்த 4 ஆசிரியா்களுக்கு மாவட்ட நிா்வாகத்தின் சாா்பில் பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது.
மாவட்ட வருவாய் அலுவலா் பெ. அரவிந்தன், முதன்மைக் கல்வி அலுவலா் மா. ராமகிருஷ்ணன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.