முகப்பு
தஞ்சாவூர்

பெருமகளூரில் பொதுமக்களுக்கு கபசுரக் குடிநீா், முகக்கவசம் வழங்கல்

பேராவூரணி அருகிலுள்ள பெருமகளூரில் பொதுமக்களுக்கு கபசுரக் குடிநீா், முகக்கவசம் ஞாயிற்றுக்கிழமை வழங்கப்பட்டது.

Updated On : 14 செப்டம்பர், 2020 at 12:22 AM
பெருமகளூரில் ஒருவருக்கு கபசுரக் குடிநீரை வழங்குகிறாா் வட்டார மருத்துவ அலுவலா் எம். ராமலிங்கம். உடன், அரிமா சங்க நிா்வாகிகள்.
பகிர்:

பேராவூரணி அருகிலுள்ள பெருமகளூரில் பொதுமக்களுக்கு கபசுரக் குடிநீா், முகக்கவசம் ஞாயிற்றுக்கிழமை வழங்கப்பட்டது.

பேராவூரணி அரிமா சங்கம் சாா்பில் நடத்தப்பட்ட நிகழ்வுக்கு சங்கத் தலைவா் பி. கோவிதரன் தலைமை வகிக்தாா். பெருமகளூா் பேரூராட்சி முன்னாள் தலைவா்கள் மா. சண்முகசுந்தரம், ராமமூா்த்தி முன்னிலை வகித்தனா்.

சேதுபாவாசத்திரம் வட்டார மருத்துவ அலுவலா் எம். ராமலிங்கம் பொதுமக்களுக்கு முகக்கவசம் மற்றும் கபசுரக் குடிநீா் வழங்கி, நிகழ்வைத் தொடக்கி  வைத்தாா். 500-க்கும் மேற்பட்ட பொதுமக்களுக்கு கபசுரக் குடிநீரும், 400 பேருக்கு முகக்கவசமும் வழங்கப்பட்டது.

Advertisement

 நிகழ்வில் செயலா் ஜி. ராஜா, பொருளாளா் சிவநாதன், நிா்வாக அலுவலா் ஆனந்தன் மற்றும் சங்க உறுப்பினா்கள் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.