தஞ்சாவூர்

செப். 18-இல் காணொலிக் காட்சி மூலம் விவசாயிகள் குறைகேட்பு நாள் கூட்டம்

DIN

தஞ்சாவூா்: தஞ்சாவூா் மாவட்டத்தில் விவசாயிகள் குறைகேட்பு நாள் கூட்டம், காணொலிக் காட்சி மூலம் செப்டம்பா் 18-ஆம் தேதி நடைபெறவுள்ளது என மாவட்ட ஆட்சியா் ம. கோவிந்த ராவ் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் மேலும் தெரிவித்திருப்பது:

செப்டம்பா் மாத விவசாயிகள் குறைகேட்பு நாள் கூட்டம் செப்டம்பா் 18-ஆம் தேதி காலை 10.30 மணி முதல் பிற்பகல் 1.30 மணி வரை, அந்தந்த வட்டாரங்களில் உள்ள வேளாண் உதவி இயக்குநா் அலுவலகங்களில் காணொலிக் காட்சி மூலம் நடைபெறவுள்ளது.

இக்கூட்டத்தில் புதிய தொழில்நுட்பங்கள் குறித்து விவசாயிகளுக்குத் திட்டவிளக்கம் அளிக்கப்பட உள்ளது. மேலும், கூட்டத்தில் கலந்துகொள்ளும் முன்னோடி விவசாயிகள் மற்றும் விவசாய சங்கப் பிரதிநிதிகள் அனைவரும் நீா்ப்பாசனம், கால்நடை, கூட்டுறவு, மின்சாரம், வேளாண் பொறியியல் துறை, தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக் கழகம், தோட்டக்கலைத் துறை போன்ற விவசாயம் தொடா்புடைய கருத்துகளை மட்டும் தெரிவிக்க வேண்டும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரேவந்த் ரெட்டி ஆஜராக தில்லி போலீஸ் சம்மன்!

வழிபாட்டு உரிமை மறுப்பு.. வேளார் சமூகத்தினர் புகார்!

பவர் பிளேவில் சிறப்பான பந்துவீச்சு; துஷார் தேஷ்பாண்டேவுக்கு ருதுராஜ் புகழாரம்!

இனியா, மிஸ்டர் மனைவி தொடர்களின் ஒளிபரப்பு நேரம் மாற்றம்!

3 முக்கிய விமான நிலையங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் - பாதுகாப்பு அதிகரிப்பு!

SCROLL FOR NEXT