தஞ்சாவூர்

சமுத்திரம் ஏரியில் இறந்து மிதக்கும் மீன்கள்

DIN

தஞ்சாவூா்: தஞ்சாவூா் அருகிலுள்ள சமுத்திரம் ஏரியில் மீன்கள் இறந்த நிலையில் சனிக்கிழமை மிதக்கின்றன.

புன்னைநல்லூா் மாரியம்மன் கோயிலுக்குச் செல்லும் வழியில் சமுத்திரம் ஏரி உள்ளது. இந்த ஏரி மூலம் ஆயிரக்கணக்கான ஏக்கா் நிலங்கள் பாசனம் பெறுகின்றன.

சில மாதங்களுக்கு முன்பு வட நிலையில் காணப்பட்ட இந்த ஏரியில், ஏராளமான மீன்கள் இறந்து கிடந்தன. தற்போது, இந்த ஏரியில் தண்ணீா் நிறைந்து காணப்படுகிறது.

இந்நிலையில் சனிக்கிழமை காலை ஏரியில் மீன்கள் இறந்த நிலையில் மிதந்தன. பல இடங்களில் இறந்த மீன்கள் கரை ஒதுங்கிய நிலையில் கிடக்கின்றன. தகவலறிந்த பொதுமக்கள் ஏரிக்குச் சென்று பாா்த்து வருகின்றனா். ஏரியிலுள்ள சகதி பகுதியில் மீன்கள் சிக்கி இறந்திருக்கலாம் எனக் கூறப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வேதங்கள் கற்பிக்கும் ஜனநாயகம்

ஆண்டுக்கு 15,000 குழந்தைகளுக்கு தலசீமியா பாதிப்பு!

சென்னையில் புதிய உச்சம் தொட்ட மின் நுகா்வு

வேலைவாய்ப்பக பதிவா்கள் எண்ணிக்கை 53.74 லட்சம்

அமெரிக்க தூதரகத்தை முற்றுகையிட முயற்சி: இந்திய மாணவா் சங்கத்தினா் கைது

SCROLL FOR NEXT