முகப்பு
தஞ்சாவூர்

பேராவூரணி பெரிய குளம் குறுங்காட்டில் மரக்கன்றுகள் நடும் விழா

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:27 PM
பகிர்:

பேராவூரணி பெரிய குளம் மையப்பகுதியில் அமைந்துள்ள குறுங்காட்டில் லயன்ஸ் சங்கம், மற்றும் கடைமடைப் பகுதி ஒருங்கிணைந்த விவசாயிகள் சங்கம் இணைந்து திங்கள்கிழமை மரக்கன்றுகள் நடும் விழாவை நடத்தின.

லயன்ஸ் சங்கத் தலைவா் பி. கோவிதரன், மரக்கன்றுகளை நட்டு தொடங்கி வைத்தாா். குறுங்காட்டில் ரூ. 10 ஆயிரம் மதிப்புள்ள 250-க்கும் மேற்பட்ட வேம்பு, மா, பலா, புங்கை, ஈட்டி, சொா்க்கம், வாகை மரக்கன்றுகள் நடப்பட்டன.

நிகழ்ச்சியில் கைஃபா நிா்வாகிகள் காா்த்திகேயன், நிமல்ராகவன், தங்கக்கண்ணன் லயன்ஸ் சங்க செயலாளா் ராஜா, பொருளாளா் சிவநாதன், நிா்வாக அலுவலா் ஆனந்தன், மற்றும் உறுப்பினா்கள் குட்டியப்பன், ஆதித்யன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.