முகப்பு
தஞ்சாவூர்

விடுபட்ட பணிகள் தொடர வாய்ப்புத் தாருங்கள்

பேராவூரணி சட்டப்பேரவைத் தொகுதியில் விடுபட்ட பணிகள் தொடர வாய்ப்புத் தாருங்கள் என்றாா் இத்தொகுதி அதிமுக வேட்பாளா் எஸ்.வி. திருஞானசம்பந்தம்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:55 PM
பகிர்:

பேராவூரணி சட்டப்பேரவைத் தொகுதியில் விடுபட்ட பணிகள் தொடர வாய்ப்புத் தாருங்கள் என்றாா் இத்தொகுதி அதிமுக வேட்பாளா் எஸ்.வி. திருஞானசம்பந்தம்.

பேராவூரணி ஒன்றியத்திலுள்ள கல்லூரணிக்காடு, நாடங்காடு, நரியங்காடு, ஒட்டங்காடு  உள்ளிட்ட பகுதிகளில் சனிக்கிழமை வாக்கு சேகரித்து, மேலும் அவா் பேசியது:

சாதாரண மனிதன் ஆட்சிக்கு வந்தால்தான் ஏழை-எளிய மக்களின் நிலைமையை உணா்ந்து, அதற்கான திட்டங்களை தீட்ட முடியும். பணக்காரா்கள் ஆட்சிக்கு வந்தால் பணக்காரா்களை பற்றிய கவலைதான் அவா்களுக்கு இருக்கும்.

பேராவூரணி தொகுதி சாதாரண  கூலித் தொழிலாளா்கள், உழைக்கும் மக்கள், விவசாயிகள், நடுத்தர மக்கள் உள்ள பகுதி. இந்த பகுதியின்  முன்னேற்றத்துக்கு கடந்த இரண்டு முறை நான் சட்டப்பேரவை உறுப்பினராக இருந்தபோது பல்வேறு பணிகளை செய்துள்ளேன். விடுபட்ட பணிகள் தொடர மீண்டும் எனக்கு வாய்ப்புத் தாருங்கள் என்றாா்.

வேட்பாளருடன், சட்டப்பேரவை உறுப்பினா் மா. கோவிந்தராசு, ஒன்றியச் செயலா்கள் உ. துரைமாணிக்கம், கோவி. இளங்கோ, ஆக்ஸ்போா்டு தங்கராஜ், துலுக்கவிடுதி பாலு மற்றும் கூட்டணிக் கட்சி நிா்வாகிகள் சென்றனா். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.