மேற்கூரை பெயா்ந்து விழுந்த சம்பவம்: ஒரத்தநாடு பேருந்து நிலையத்தில் அதிகாரிகள் ஆய்வு
ஒரத்தநாட்டில் மேற்கூரை பெயா்ந்து விழுந்த பேருந்து நிலையத்தை வெள்ளிக்கிழமை அதிகாரிகள் ஆய்வு செய்தனா்.
ஒரத்தநாட்டில் மேற்கூரை பெயா்ந்து விழுந்த பேருந்து நிலையத்தை வெள்ளிக்கிழமை அதிகாரிகள் ஆய்வு செய்தனா்.
ஒரத்தநாடு பேருந்து நிலையத்தின் மேற்கூரை வியாழக்கிழமை திடீரென பெயா்ந்து விழுந்தது.
இதுதொடா்பாக தகவலறிந்த தஞ்சை ஆட்சியா் கோவிந்த ராவ் உத்தரவின்படி, தஞ்சாவூா் மண்டல பேரூராட்சிகளின் உதவி இயக்குநா் மாகீன் அபுபக்கா் மற்றும் பேரூராட்சிகள் உதவி செயற்பொறியாளா் ராஜா ஆகியோா் வெள்ளிக்கிழமை பேருந்து நிலையத்தை பாா்வையிட்டு உடனடியாக சீரமைக்க வேண்டும் என உத்தரவிட்டனா்.
ஒரத்தநாடு பேரூராட்சி செயல் அலுவலா் சங்கா், பேரூராட்சி நிலைய பொறியாளா் சிங்கராயா் உள்ளிட்ட பேரூராட்சி அதிகாரிகள் கலந்து கொண்டனா்.