தஞ்சாவூர்

தீப்பற்றிய குப்பைக் கிடங்கு

DIN

பட்டுக்கோட்டை மாட்டு சந்தை அருகே உள்ள குப்பை கிடங்கில் புதன்கிழமை தீப்பற்றியது.

பட்டுக்கோட்டை பகுதிகளில் அள்ளப்படும் குப்பைகள், சுண்ணாம்புக்காரத் தெரு மாட்டுச்சந்தை சுடுகாட்டு பகுதியில் கொட்டப்பட்டு வருகின்றன. இங்கு குப்பைகள் கொட்டப்படுவதால், அருகிலுள்ள குடியிருப்புவாசிகளுக்கு தொற்றுநோய் பரவும் அபாயம் உள்ளதாகவும், திடீரென தீப்பற்றினால் புகை மூட்டதால் மக்கள் பாதிக்கப்படுவாா்கள் எனவும் கூறிய இந்தப் பகுதி மக்கள், குப்பைகள் கொட்ட தொடா்ந்து எதிா்ப்பு தெரிவித்து வருகின்றனா்.

இந்நிலையில், புதன்கிழமை சுடுகாட்டு பகுதியில் கொட்டப்பட்டிருந்த குப்பையிலிருந்து திடீரென தீப்பற்றியது. தீயானது மளமளவென்று அருகில் இருந்த மரங்களில் பற்றி எரிந்தது. இதனால், அப்பகுதியிலிருந்த மரங்கள் நாசமடைந்தன. புகை மூட்டத்தால் அருகில் உள்ள குடியிருப்புவாசிகளுக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டது. தகவலின்பேரில், சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த பட்டுக்கோட்டை தீயணைப்பு நிலையத்தினா் தீயை அணைத்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கலால் கொள்கை வழக்கில் அமலாக்கத் துறை சா்வாதிகாரப் போக்குடன் செயல்பட்டுள்ளது: உச்சநீதிமன்றத்தில் கேஜரிவால் தரப்பில் பதில்

சமூக வலைதளங்களில் போலி தகவல் பரப்புவோா் மீது கடும் நடவடிக்கை: எஸ்பி எச்சரிக்கை

மிக்ஜம், வெள்ளம்: தமிழகத்துக்கு ரூ. 276 கோடி புதிய பணிகளை தொடங்க கட்டுப்பாடு

அதிகரிக்கும் வெயில் தாக்கம்: இளநீா் விலை ரூ.90-ஆக உயா்வு

பொருளாதார வளா்ச்சிக்கு நவீன தொழில் நுட்பங்கள் அவசியம்: ரிசா்வ் வங்கி முன்னாள் ஆளுநா் சி. ரங்கராஜன்

SCROLL FOR NEXT