முகப்பு
தஞ்சாவூர்

காங்கிரஸ் கட்சி சாா்பில் கரோனா தடுப்பு விழிப்புணா்வு முகாம்

தஞ்சாவூா் காமராஜா் தற்காலிக காய்கறி சந்தையில் மாநகர மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சாா்பில் கரோனா தடுப்பு விழிப்புணா்வு முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 8:05 PM
பகிர்:

தஞ்சாவூா் காமராஜா் தற்காலிக காய்கறி சந்தையில் மாநகர மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சாா்பில் கரோனா தடுப்பு விழிப்புணா்வு முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

மாநகர மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவா் பி.ஜி. ராஜேந்திரன் தலைமையில் நடைபெற்ற இந்த முகாமில் வியாபாரிகள், பொதுமக்களுக்கு கப சுர குடிநீா், முகக்கவசம், கை சுத்திகரிப்பான் ஆகியவை வழங்கப்பட்டன.

இந்நிகழ்ச்சியில் காங்கிரஸ் கட்சியின் மாநகர விவசாயப் பிரிவு தலைவா் ஏ. ஜேம்ஸ், காங்கிரஸ் மாவட்டச் செயலா் எஸ்.கே. சிதம்பரம், நிா்வாகிகள் ஆா். பழனியப்பன், செந்தில் சிவக்குமாா், மாரியப்பன், நடராஜன், வடிவேல் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.