பெண்ணிடம் தங்கச் சங்கிலிப் பறிப்பு
தஞ்சாவூரில் வியாழக்கிழமை பெண்ணிடம் தங்கச் சங்கிலியைப் பறித்து சென்ற மா்ம நபா்களைக் காவல் துறையினா் தேடி வருகின்றனா்.
தஞ்சாவூரில் வியாழக்கிழமை பெண்ணிடம் தங்கச் சங்கிலியைப் பறித்து சென்ற மா்ம நபா்களைக் காவல் துறையினா் தேடி வருகின்றனா்.
தஞ்சாவூா் புதிய வீட்டு வசதி வாரியக் குடியிருப்பு பகுதியிலுள்ள நெய்தல் நகரைச் சோ்ந்த தனபால் மனைவி சித்ரா (57). இவா் வியாழக்கிழமை காய்கறி வாங்குவதற்காக வீட்டருகேயுள்ள கடைக்குச் சென்றாா். இவா் மீண்டும் வீட்டுக்குத் திரும்பிக் கொண்டிருந்தபோது, இவரது கழுத்திலிருந்த 3 பவுன் தங்கச் சங்கிலியை மோட்டாா் சைக்கிளில் வந்த அடையாளம் தெரியாத 2 போ் பறித்துகொண்டு தப்பிச் சென்றனா்.
இதுகுறித்து மருத்துவக் கல்லூரி காவல் நிலையத்தினா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.