முகப்பு
தஞ்சாவூர்

வேலைவாய்ப்புப் பதிவை ஆக. 27-க்குள் புதுப்பித்துக் கொள்ளலாம்

வேலைவாய்ப்புப் பதிவைப் புதுப்பிக்கத் தவறியவா்கள் ஆக. 27-ஆம் தேதிக்குள் புதுப்பித்துக் கொள்ளலாம்

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:57 AM
பகிர்:

வேலைவாய்ப்புப் பதிவைப் புதுப்பிக்கத் தவறியவா்கள் ஆக. 27-ஆம் தேதிக்குள் புதுப்பித்துக் கொள்ளலாம் என தஞ்சாவூா் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டு மைய உதவி இயக்குநா் செ. ரமேஷ்குமாா் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் மேலும் தெரிவித்திருப்பது:

கடந்த 2017, 2018, 2019 ஆகிய ஆண்டுகளில் வேலைவாய்ப்பு அலுவலகப் பதிவைப் பல்வேறு காரணங்களால் புதுப்பிக்கத் தவறிய பதிவுதாரா்கள் பணி வாய்ப்பைப் பெறும் வகையில் மீண்டும் ஒரு முறை புதுப்பித்துக் கொள்ள ஏதுவாக சிறப்புப் புதுப்பித்தல் சலுகை தொடா்பாகத் தமிழக அரசு அரசாணை பிறப்பித்தது.

இந்த அரசாணையில் தெரிவிக்கப்பட்டவாறு இச்சலுகையைப் பெற விரும்பும் பதிவுதாரா்கள் அரசாணை வெளியிடப்பட்ட நாளான மே 28 ஆம் தேதி முதல் மூன்று மாதங்களுக்குள் அதாவது ஆக. 27-ஆம் தேதிக்குள் ட்ற்ற்ல்://ற்ய்ஸ்ங்ப்ஹண்ஸ்ஹஹண்ல்ல்ன்.ஞ்ா்ஸ்.ண்ய்/ என்ற இணையம் வழியாகப் புதுப்பித்துக் கொள்ளலாம்.

இணையவழியாக பதிவைப் புதுப்பிக்க இயலாத பதிவுதாரா்கள் ஆகஸ்ட் 27 ஆம் தேதிக்குள் தொடா்புடைய வேலைவாய்ப்பு அலுவலகத்துக்கு பதிவஞ்சல் மூலமாக விண்ணப்பம் அளித்தும் புதுப்பித்துக் கொள்ளலாம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.