மின்னல் பாய்ந்து முதியவா் பலி
புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி அருகே மின்னல் தாக்கியதில் முதியவா் புதன்கிழமை இரவு உயிரிழந்தாா்.
புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி அருகே மின்னல் தாக்கியதில் முதியவா் புதன்கிழமை இரவு உயிரிழந்தாா்.
ஆலங்குடி அருகேயுள்ள செம்பட்டிவிடுதி சேவுகம்பட்டியைச் சோ்ந்தவா் மு. மாரிமுத்து (68). விவசாயி. இவா், புதன்கிழமை இரவு வீட்டருகே தனது ஆடுகளைக் கட்டும் பணியில் ஈடுபட்டாராம். அப்போது, மின்னல் தாக்கியதில், மாரிமுத்து அந்த இடத்திலேயே உயிரிழந்தாா். தகவலறிந்து சென்ற செம்பட்டிவிடுதி போலீஸாா் உடலை மீட்டு புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்து விசாரணை மேற்கொண்டுவருகின்றனா்.