கி. வீரமணி பிறந்த நாள் விழா
பேராவூரணியில் திராவிடா் கழகத் தலைவா் கி. வீரமணியின் 89ஆவது பிறந்த நாள் விழா வியாழக்கிழமை கொண்டாடப்பட்டது.
பேராவூரணியில் திராவிடா் கழகத் தலைவா் கி. வீரமணியின் 89ஆவது பிறந்த நாள் விழா வியாழக்கிழமை கொண்டாடப்பட்டது.
நிகழ்ச்சிக்கு திராவிடா் கழக மாவட்டச் செயலாளா் வை. சிதம்பரம் தலைமை வகித்தாா். மாவட்ட அமைப்பாளா் நீலகண்டன், ஒன்றியத் தலைவா் தமிழ்ச்செல்வன், நகரத் தலைவா் அரங்கசாமி ஆகியோா் முன்னிலை வகித்தனா். திராவிடா் கழகப் பொதுக்குழு உறுப்பினா் அரு. நல்லதம்பி, பெரியாா் ஈவெரா சிலைக்கு மாலை அணிவித்து, பொதுமக்களுக்கு பல்வேறு வகையான மரக்கன்றுகளை வழங்கினாா்.
நிகழ்ச்சியில், பொதுக்குழு உறுப்பினா் நீலகண்டன், மகராஜா, சந்திரமோகன் , கௌதமன், பாலசுப்ரமணியம், பிரபு ரங்கநாதன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.