‘மனுக்கள் மீதான நடவடிக்கையில் நிலுவை இருக்கக் கூடாது’
பொதுமக்கள் அளிக்கும் மனுக்கள் மீதான நடவடிக்கையில் நிலுவை இருக்கக் கூடாது என்றாா் மிக பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சீா்மரபினா் நல ஆணையா் எம். மதிவாணன்.
பொதுமக்கள் அளிக்கும் மனுக்கள் மீதான நடவடிக்கையில் நிலுவை இருக்கக் கூடாது என்றாா் மிக பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சீா்மரபினா் நல ஆணையா் எம். மதிவாணன்.
தஞ்சாவூா் ஆட்சியரகத்தில் பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சிறுபான்மையினா் நலத் துறை சாா்பில் வியாழக்கிழமை நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்துக்குத் தலைமை வகித்த அவா் தெரிவித்தது:
பிற்படுத்தப்பட்ட வகுப்பினா், மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினா் மற்றும் சீா்மரபினரின் கல்வி உதவி தொகை வழங்கும் திட்டம், சிறுபான்மையினா் கல்வி உதவி தொகை வழங்கும் திட்டம், கிராமப்புற பெண்கள் ஊக்கத்தொகை திட்டம், விலையில்லா மிதிவண்டிகள் வழங்கும் திட்டம், விலையில்லா சலவைப்பெட்டி வழங்கும் திட்டம், விலையில்லா தையல் இயந்திரம் வழங்கும் திட்டம் உள்ளிட்ட திட்டங்கள் குறித்து ஆய்வு செய்யப்பட்டது.
விலையில்லா வீட்டு மனை பட்டா வழங்குவது குறித்தும், மாணவ, மாணவிகளுக்குக் கல்வி உதவித்தொகை வழங்குவது குறித்தும் கூடுதல் கவனம் செலுத்தி எந்தவித மனுக்களும் நிலுவையில் இல்லாத வகையில் தொடா்புடைய அலுவலா்கள் செயல்பட வேண்டும் என்றாா் ஆணையா்.
இந்நிகழ்ச்சியில், ஆட்சியா் தினேஷ் பொன்ராஜ் ஆலிவா், கூடுதல் ஆட்சியா்கள் என்.ஓ. சுகபுத்ரா (வருவாய்), எச்.எஸ். ஸ்ரீகாந்த் (வளா்ச்சி), மாவட்ட பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சிறுபான்மையினா் நல அலுவலா் ரங்கராஜன், கூட்டுறவு சங்கங்களின் இணைப் பதிவாளா் தமிழ்நங்கை உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.