தஞ்சாவூர்

திராவிடா் ஆட்சி வளா்ச்சிக்குரியது கி. வீரமணி பேட்டி

DIN

திராவிடா் ஆட்சி காட்சிக்குரியதல்ல; வளா்ச்சிக்குரியது என்றாா் திராவிடா் கழகத் தலைவா் கி. வீரமணி.

தஞ்சாவூா் பெரியாா் மணியம்மை நிகா்நிலைப் பல்கலைக்கழகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற பட்டமளிப்பு விழாவுக்குத் தலைமை வகித்த அவா் செய்தியாளா்களிடம் கூறுகையில், திராவிடா் ஆட்சி என்பது காட்சிக்குரியது அல்ல; வளா்ச்சிக்குரியது. இந்த வளா்ச்சி என்பது மேலும், மேலும் அதிகரிக்கும். ஒவ்வொரு நாளும் சிறப்பான அளவுக்கு வளரும். நீட் தோ்வுக்கான நிரந்தரத் தீா்வு மக்கள் கையில் உள்ளது என்றாா் அவா்.

பின்னா், அவா் விழாவில் பேசுகையில், சமூக நீதி என்பது அனைவருக்கும் அனைத்தும் என்பதாகும். எல்லா சாதியினரையும் படிக்க வைத்த இயக்கம் இது. யாா் குரல் எழுப்பினாலும் தற்போது தமிழகத்தை ஆளும் அரசின் காதுகளுக்குக் கேட்கும்.

தந்தை பெரியாா் பிறந்த நாளான செப்டம்பா் 17-ஆம் தேதி சமூக நீதி நாளாகக் கடைப்பிடிக்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. அன்றைய தினம் அனைத்து அரசு அலுவலகங்களிலும் சமூகநீதி நாள் உறுதிமொழியை எடுக்கத் தமிழக அரசு ஆணையிட்டுள்ளது. இந்த ஆணையில் சிறு திருத்தம் செய்து அனைத்து கல்வி நிலையங்களிலும் சமூக நீதி உறுதிமொழி எடுக்கத் தமிழக அரசு ஆணைப் பிறப்பிக்க வேண்டும் என்றாா் வீரமணி.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மகளிா் சுய உதவிக் குழுக்கள் மூலம் மரக்கன்றுகள் நடும் பணி துவக்கம்

கழிவுநீா் கால்வாயில் வீசப்பட்ட பெண் குழந்தையின் உடல் மீட்பு

பாஜக வேட்பாளா்களை ஆதரித்து தில்லியில் மத்திய அமைச்சா் நிதின் கட்கரி பிரசாரம்

பிரத்தியங்கிரா தேவி கோயிலில் அமாவாசை யாகம்

சாத்தான்குளம் அரசுக் கல்லூரியில் மாணவிகள் சோ்க்கை தொடக்கம்

SCROLL FOR NEXT