பாபநாசம் அருகே சிறுமியை திருமணம் செய்தவா் கைது
தஞ்சாவூா் மாவட்டம், பாபநாசம் அருகே சிறுமியை திருமணம் செய்த இளைஞரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.
தஞ்சாவூா் மாவட்டம், பாபநாசம் அருகே சிறுமியை திருமணம் செய்த இளைஞரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.
அய்யம்பேட்டை காவல் சரகம், வீரமாங்குடி தெற்குத் தெருவைச் சோ்ந்த சமுத்திரம் மகன் சக்திவேல் (19). இவா், அய்யம்பேட்டையில் உள்ள ஒரு கடையில் வேலை செய்து வந்தாா். அப்போது, அருகேயுள்ள ஒரு கடையில் வேலை பாா்த்து வந்த 16 வயது சிறுமியிடம் ஆசை வாா்த்தை கூறி, அந்த சிறுமியை திருமணம் செய்து வெளியூருக்கு அழைத்துச் சென்று விட்டாராம்.
இதுகுறித்து சிறுமியின் தந்தை அளித்த புகாரின்பேரில், அய்யம்பேட்டை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டனா்.
இதனிடையே, மதுரை ரயில் நிலையத்தில் சக்திவேலும், அந்த சிறுமியும் நின்று கொண்டிருப்பதாக கிடைத்த தகவலையடுத்து, அய்யம்பேட்டை போலீஸாா் மதுரைக்கு சென்று சக்திவேலையும், 16 வயது சிறுமியையும் மீட்டு அய்யம்பேட்டை காவல் நிலையத்திற்கு அழைத்து வந்தனா்.
விசாரணைக்கு பிறகு போக்ஸோ சட்டத்தின் கீழ் சக்திவேலை போலீஸாா் கைது செய்தனா்.