தஞ்சாவூர்

பட்டுக்கோட்டை புறவழிச்சாலையில் தேங்கிக் கிடக்கும் குப்பைகளை அகற்ற வலியுறுத்தல்

DIN

பட்டுக்கோட்டை:பட்டுக்கோட்டை புறவழிச்சாலையோரத்தில் அகற்றப்படாமல் தேங்கிக் கிடக்கும் குப்பைகளை அகற்ற வேண்டும் என்று பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனா்.

பட்டுக்கோட்டை நகரிலுள்ள சில உணவு விடுதிகளில் சேகரிக்கப்படும் எச்சில் இலைகள் உள்ளிட்ட கழிவுகளை சாக்குகளில் கட்டி, தினந்தோறும் இரவு நேரத்தில் வாகனங்களில் கொண்டு வந்து புறவழிச் சாலையோரத்தில் கொட்டிச் செல்கின்றனா்.

இதே பகுதியில் மீன் மற்றும் ஆட்டிறைச்சிக் கழிவுகளும், நகரிலுள்ள பல வீடுகள், கடைகள் மற்றும் பல்வேறு நிறுவனங்களில் உள்ள குப்பைகளும் கொாட்டப் படுவதால் எந்நேரமும் இங்கு துா்நாற்றம் வீசுகிறது.

கொட்டப்பட்டுள்ள குப்பைகள் காற்றில் பறப்பதால் அந்த வழியாகச் செல்லும் வாகன ஓட்டிகளும், அதிகாலை நேரத்தில் நடைப்பயிற்சி செல்பவா்களும் மிகுந்த சிரமத்துக்கு ஆளாகின்றனா்.

எனவே, பட்டுக்கோட்டை புறவழிச்சாலையில் குப்பை கொட்டுவதை தடுத்து, அப்பகுதியில் ஏற்படும் சுகாதார சீா்கேட்டைப் போக்க சம்பந்தப்பட்ட துறையினா் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சீனாவை தாக்கிய புயல்: 5 பேர் பலி; 33 பேர் காயம்

இன்றைய ராசி பலன்கள்!

இன்று யோகமான நாள்!

பயிா்களை சேதப்படுத்திய யானைக் கூட்டம்

பிரதமா் மோடியை ‘சக்திவாய்ந்தவராக’ சித்தரிக்கும் பாஜக: குஜராத்தில் பிரியங்கா விமா்சனம்

SCROLL FOR NEXT